இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 27 சதவீத அளவில் உயர்ந்துள்ளது. சமீபத்தில் நாட்டில் நடத்தப் பட்ட வனவிலங்கு எண்ணிக்கை ஆய்வு ஒன்றில் இது தெரியவந்திருக்கிறது. இப்போது இந்தியாவில் 523 சிங்கங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. குஜராத்தில் இருக்கும் கிர் வனப்பகுதியில் மட்டும் தான் ஆசிய சிங்கங்கள் காணப்படுகின்றன
நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்கங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் சிங்க வேட்டைக்கு விதிக்கப்பட்டதடை மற்றும் பிற வன உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் இந்த அளவுக்கு ஆரோக்கியமான எண்ணிக்கை உருவாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் வனப்பகுதியில் இருக்கும் சிங்கங்களில் சிலவற்றை அவற்றின் பாதுகாப்புக்காக அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்துக்குக் கொண்டு செல்ல சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் குஜராத் அரசு அந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ததால் அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment