Friday, 22 May 2015

மருந்து விஷமாகுதல் / அதிகமாக உட்கொள்ளுதல்


    எதிர்பாரத விதமாக மருந்து மாத்திரைகளை அளவிற்கு மீறி உட்கொல்வதாலோ அல்லது சிறிது நேர இன்பத்திற்காக மனநிலையை மாற்றக்கூடிய பொருட்களை உட்கொல்வதாலோ, அவையே விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. மருந்துகள் வாய் வழியாக உட்கோள்ளப்படுகின்றன, மற்றும் ஊசியின் மூலம் உடலினுள் செலுத்தப்படுகின்றன, மூக்கின் மூலம் சுவாசிக்கப்படுகின்றன. நிகோடின், ஆல்கஹால், கோகெயின், அபின், கேனபிஸ் என்னும் ஒரு வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருள், மற்றும் சில மதிமயக்கும் மருந்துகள் போன்றவை உட்கொள்வதால் மைய நரம்பு மண்டலம், இரத்தம், இறைப்பை, சிறுநீரகங்கள் முதலியவைகள் பதிக்கப்படும். ஆண், பெண் இருபாலரும், எல்லா வயதினரும் இவற்றினால் பாதிக்கப்படுவர்.

அறிகுறிகள்
  1. உட்கொள்ளப்படும் அளவைப் பொறுத்து உடலில் மாற்றங்கள் நிகழும்.
  2. அவர்கள் நடத்தை முரணாக இருக்கும்.
  3. உடனே வாந்தி எடுக்கமாட்டார்கள்.
  4. பார்வை பிரகாசமாகும், சிறு ஓசை கூடப் பெரியதாகக் கேட்கும்.
சிகிச்சை
  1. அவர் உணர்விலக்கவில்லை என்றால் என்ன சாப்பிட்டார் என்று கேளுங்கள்.
  2. உணர்விழந்துவிட்டரென்றால் அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்து உடனே மருத்துவ உதவியை நாடவும்.
  3. அவர் அருகில் மாத்திரை புட்டிகள், மருந்து புட்டிகள் இருந்தாலோ, அவர் வாந்தி எடுத்திருந்தாலோ, அவற்றின் மாதிரியை மருத்துவரிடம் கொடுக்கவும்.

No comments:

Post a Comment