Wednesday, 17 June 2015

நிஜமான பதிலடி


இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதும் எதிரும் புதிருமாக நிற்கும் நாடுகள். இரு தேசங்களும் பிரிந்த காலத்தில் இருந்து இன்றுவரை அவ்வபோது மோதிக் கொண்டு தான் இருக்கின்றன.

கார்கிலுக்கு முன் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர்களில் 1965-ம் ஆண்டு நடந்த போருக்கு இந்திய வரலாற்றில் தனி முக்கயத்துவம் உண்டு. அந்த போர் தான் 'தன்னை பெரிய ஆள்' என்று தலைக்கனம் கொண்டு ஆடிய பாகிஸ்தானின் எண்ணத்தை தவிடு பொடியாகியது. இந்திய ராணுவ வீரர்கள் தான் பெருமைமிகு இந்த சாகதத்தைச் செய்தார்கள்.

அப்போது பாகிஸ்தான் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்தது. இந்தியாவோ அணிசேரா நாடுகளின் தலைவனாக இறந்தது. அமெரிக்காவின் நட்பை பயன்படுத்திக் கொண்டு, 4௦௦ பேட்டன் டாங்குகளை இலவசமாக வாங்கிக் குவித்தது, பாகிஸ்தான். அப்போது பேட்டன் டாங்க் தான் உலகநாடுகளில் சர்வ வல்லமை படைத்த, எதனாலும் சிதைக்க முடியாத, அளிக்க முடியாத டாங்க்.

இப்படியொரு வலிமையான ஆயுதம் கையில் கிடைத்தால் சும்மா இருக்குமா பாகிஸ்தான். இந்தியாவை வேகுசாமான்யமாக நினைத்து சீண்டிப் பார்த்தது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் 1965 செப்டம்பரில் இந்திய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது.

ஆரம்பத்தில் பேட்டன் டாங்குகளின் திடீர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இந்திய ராணுவம் திணறியது உணமைதான். ஆனால் மிகக்குறைந்த அவகாசத்திலேயே பேட்டனின் பலவீனத்தை இந்திய ராணுவம் அறிந்து கொண்டது. பேட்டனுக்கு முன்புறம் தாக்கப்படும் எந்த தாக்குதலையும் அது தவிடுபோடியக்கிவிடும். அதேவேlaiயில் பின்புறம் மிக மெலிதான தடுப்புகள் மேட்டுமே இருந்தன. இந்த உண்மையை கண்டுபித்த இந்திய ராணுவத்தின் ஹவில்தார் அப்துல்ஹமீது, பேட்டன் டாங்குகளை போக விட்டு பின்னால் சுற்றி வளைத்து தாக்கினார்.

முன்புறம் யானை மாதிரி எந்த தாக்குதலையும் தங்கும் பேட்டன், பின்பக்கம் அடித்ததும் பிய்ந்து தொங்கி சேதாரமானது. உற்சாகமான இந்திய வீர்கள் 4௦௦ பேட்டன் டாங்குகளையும் அடித்து நொறுக்கினார்கள் இந்த பிரமிப்புமிக்க தாக்குதலுக்கு இந்திய ராணுவம் வைத்த பெயர் 'அசல் உத்தர்' அதாவது நிஜமான பதிலடி.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, பேட்டன் டாங்கிகளை தாரிப்பதையே முற்றிலுமாக அமெரிக்கா நிறுத்தி விட்டது. 22 நாட்கள் நடந்த யுத்தத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குச் சொந்தமான 1,5௦௦ சதுர மைல் இடத்தை கைப்பற்றியது, வரலாறு. சர்வதேச எல்லையை விட்டு இந்தியா ஒருபோதும் தாண்டி வராது என்ற பாகிஸ்தானின் நினைப்பிலும் மண் விழுந்தது அப்போது தான். தேவைப்பட்டால் இந்திய ராணுவம் எந்த எல்லைக்கும் போகும் என்பதை உலகம் உணர்ந்து கொண்ட யுத்தமும் அது தான்.

அப்போது பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் உயரம் வெறும் ஐந்தடி தான். "மிக குள்ளமான மனிதர் எடுத்த மிக உயர்ந்த முடிவு" என்று உலகம் இந்த ராணுவ நடவடிக்கை பற்றி பெருமையாக கூறியது.

No comments:

Post a Comment