இன்றைய மனிதன் ஒவ்வொருவருக்கும் மூன்றாம் கை போன்று மொபைல் பொங்கல் மாறிவிட்டன. ஒருவருக்கு ஒரு மொபைல் போன்ற நிலை மாறி 2 சிம் போன்கள், 3 சிம், 4 சிம் என்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதவிட வேகமாக செல் போன்களில் விலை குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய விற்பனை பொருளாக மொபைல் போன்கள் மாறியுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
அதெல்லாம் சரி, போன்களில் தரத்தை எப்படி அறிவது. விடை கண்டுபிடிக்க முடியாத ஒரு கேள்வியாகத்தான் இது இன்று வரை இருந்து வருகிறது. இருப்பினும் நாம் வாங்கும் போனின் தயாரிப்பு, தரம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு செல்போனிலேயே வழி உள்ளது. செல்போனில் உள்ள அத்தனை விஷயங்களை தெரிந்து வைத்திருக்கும் பலருக்கும் கூட இந்த விஷயம் தெரியாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத மொபைல் போன்களை இந்திய அரசு தடை செய்தது. அதன்பின் அத்தனை செல்போன்களுள் ஐ.எம்.இ.ஐ எண்ணுடன் தான் தயாரிக்கபபடுக்கிறன.
ஆனால் இந்த ஐ.எம்.இ.ஐ என்பது எண் மட்டுமல்ல, உங்கள் மொபைல் போனின் ஜாதகமே அதில் உள்ளது. அது எப்படி தெரியுமா?
மொபைல் போனை எடுத்து *#6# என டைப் செய்தால், உங்கள் போனின் ஐ.எம்.இ.ஐ எண் திரையில் தெரியும். அதில் முதல் 6 இலக்கங்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 7 மற்றும் 8வது இடத்தில் உள்ள என் தான் நம்மைப் பொறுத்தவரை முக்கியமானதாகும்.
7,8 வது எண்களில்௦௦ என இருந்தால் அது தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் தரமான போன் ஆகும். அந்த இடங்களில் 03, 04, 01, 10 என இருந்தால், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தரமான மொபைல் என்று அர்த்தம்.
அதே 7, 8ம் இலக்கங்களில் ௦2, 2௦ என இருந்தால் அது துபாய், கொரியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ஆகும். இதன் தரத்தைப்பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சார்ஜ் செய்யும் போது வெடிக்கலாம். ஜாக்கிரதை.
சரி மொபைலை வாங்கி பணம் கொடுத்த பின்னர் தானே பார்க்க முடியும், அதனால் என்ன பயன் என்கிறீர்களா? வாங்கும் முன்பே மொபைல் போனின் அட்டைப் பேட்டியிலேயே ஐ.எம்.இ.ஐ எண் அச்சிடப்பட்டிருக்கும். எனவே அட்டைபெட்டியை வைத்தே போனின் தரத்தை அறிந்துவிட முடியும்.
என்னதான் இதை வைத்து தரத்தை முடிவு செய்தாலும், போன் உழைப்பது நமுடைய அதிர்ஷ்டத்தை பொருத்து தான்.
No comments:
Post a Comment