உலகத்தில் பணக்கார நாடுகள் வரிசையில் இந்தியா எந்த இடம் என்பதை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகின் நம்பர் ஒன் பணக்கார நாடு லக்ஸம்பர்க் என்ற குட்டிநாடுதான் இந்த நாட்டின் தனிநபர் ஆண்டு வருமானம் 80 ஆயிரத்து 800 டாலர். ஐரோப்பாவில் உள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 லட்சம் தான். அடுத்து 2-வது பணக்கார நாடு என்ற இடத்தை கத்தார் நாடும், 3-வது இடத்தை நார்வேயும் பெற்றுள்ளன. குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 4,5,6, வது இடங்களையும் அமேரிக்கா 7வது இடத்தையும், அயர்லாந்து 8வது இடத்தையும், ஈக்வடார் கினியா 9-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து 1௦-வது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த வகையில் உலக பணக்கார நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 115வது இடம் கிடைத்துள்ளது. ஆனாலும் இந்தியாவை ஒரு பணக்கார நாடு என்கிறார்கள். 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 82.69 கோடி செல்போன்கள் உள்ளன. விவசாய உற்பத்தி பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் உணவை பொறுத்தவரை தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குகிறது. அதேபோல் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்காக இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. முன்பு வளைகுடா நாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் இப்பொழுது எல்லா நாடுகளுக்கும் சென்று சம்பாதிக்கின்றனர். அந்த பணத்தை இங்குள்ள குடும்பகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்திய பொருளாதாரம் முன்பு இருந்ததைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூட இந்தியர்கள் இப்போது நல்ல உணவை சாப்பிட்டு நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றார். இந்திய நடுத்தர மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தங்கம் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாடிக் கொண்டிருந்த இந்தியர்கள் இப்போது ஆடம்பர பொருட்களை வாங்கிக்குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரியல் எஸ்டேட் சொத்துகளை வாங்குவதில் தீவிரமாய் உள்ளனர். 2030க்குள் இந்தியா, பொருளாதரத்தில் உலக அளவில் மூன்றாவது நாடாகவும், 2050ல் பொருளாதரத்தில் இந்தியா முதலிடத்தையும் பிடித்துவிடும். இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா ஒரு பணக்கார நாடுதான்.
No comments:
Post a Comment