Thursday, 4 June 2015

ஸ்மார்ட் போன் ஜாக்கிரதை


       தற்போது ஸ்மார்ட் போன் கையில் இல்லாதவர்களை கண்டுபிடிப்பதே சிரமம். உலகில் 80 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் என்கின்றன ஆய்வுகள்.

          ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை, அனைவரையும் அதிலேயே ஆழ்ந்து போகச் செய்கின்றன. பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட் போன்களால் ஆபத்துகளும் அதிகம் என்பதே உண்மை. ஆம், ஸ்மார்ட் போனில் மூழ்கி உயிரை விட்டவர்கள் உலகளவில் அதிகம்.

    ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் ஆர்வத்தில் விபத்தில் சிக்கி உயிரை விடுபவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில் உள்ளது. எக்குத்தப்பாக 'செல்பி' எடுக்க ஆசைப்பட்டு உயிரைப் பரிகொடுப்பவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும். இதன் காரணமாக, ஜாக்கிரதையாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குறித்து மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன.

        சீனா ஒரு படி மேலே போய், சாலையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியபடி நடப்பவர்களுக்காக தனிப்பகுதியையே ஒதுக்கிவிட்டது. அதைக் குறிக்கும் சின்னங்களும் அப்பகுதியில் தீட்டப்பட்டுள்ளன. இப்படி எல்லாம் இருந்தாலும், நமது பாதுகாப்பு என்பது நம்முடைய பொருப்புதான். எனவே ச்மார்த்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment