Wednesday, 3 June 2015

சாஸ்திரியின் மரணத்தில் மர்மம்


   அளிமையான மனிதர், அன்பான குடும்பத் தலைவர், அபூர்வமான அரசியல்வாதி, நேர்மையும், அரசியல் உறுதியும் கொண்ட ஆட்சியாளர் என்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பற்றி ஏகப்பட்ட பரிணமங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் இயற்கையானது தானா? என்ற சந்தேகமும் இருக்கிறது.

   இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 1965-ல் நடந்த போருக்கு பிறகு மிக முக்கியமான ஒரு ஒப்பந்தத்திற்காக பிரதமர் லால் பகதூர் சாத்திரி தாஷ்கண்டிற்கு (ரஷியா) சென்று இருந்தார்.

   இதய நோயாளியான அவரை தனியாக அனுப்ப சாஸ்திரியின் மனைவி லலிதா பயந்தார். 'நானும் உங்களுடன் வருகிறேன்' என்றார். 'நான் அரசு செலவில், அரசு வேளைக்காக போகிறேன். உன்னையும் அழைத்துக்கொண்டு போனால நான் நாட்டுக்காக போகிறேன் என்று நினைப்பார்களா அல்லது சந்தோஷத்திற்காக போகிறேன் என்று நினைப்பார்களா?' என்று சாஸ்திரி கேட்டதும் லலிதா தனது எண்ணத்தை கைவிட்டார்.

   தாஷ்கண்ட் ஒப்பந்தம் முடிந்த பின் ரஷியா அதிபர் கோசிஜின் கொடுத்த வரவேற்புக்கு போய்விட்டு தான் தங்கி இருந்த இடத்திற்கு சாஸ்திரி வந்தார். நள்ளிரவு 1.20 மணிக்கு அவரது உதவியாளர் அறைக்கதவு தட்டப்பட்டது.

   வெளியே தன மார்பை பிடித்தபடி வழியால் துடித்துக் கொண்டிருந்தார் சாஸ்திரி. உடனே டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. 1.32 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இந்த மரணம் இயற்கையானது இல்லை என்ற சந்தேகம் பல காரணங்களோடு முன் வைக்கப்படுகின்றது.

   அவற்றில் ஓன்று சாஸ்திரி படுக்கைக்கு போகும் முன் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த 'பிளாஸ்க்' ஒன்றை சுட்டிக்காட்டினார். அதற்குள் இருக்கும் வெந்நீரை தான் கேட்பதாக நினைத்து பிளாஸ்கை எடுத்தார்கள். அது வேண்டாம் என்பது போல் சைகை செய்தார். எதைப் பொருட்படுத்தாமல் அதில் இருந்ததை சாஸ்திரிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு தான் அவர் மரணமடைந்துள்ளார். எனவே அந்த 'பிளாஸ்க்' சந்தேகத்துக் கூறியதாக கருதப்படுகிறது. சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து சாஸ்திரி கடைசியாக இருந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் விரும்ப, தாஷ்கண்டில் அவர் தங்கி இருந்த அறையில் எதையும் கலைக்காமல் அப்படியே வைத்திருந்தார்கள் சாஸ்திரி உபயோகித்த சோப்பு, துண்டு உள்பட எல்லா பொருட்களும் அப்படியே இருந்தன. சாஸ்திரியால் சுட்டிகாட்டப்பட்ட 'பிளாஸ்க்' மட்டும் காணவில்லை. இதுதான் அவரது மரணத்தை சந்தேகப்பட வைப்பதாக உள்ளது.

No comments:

Post a Comment