ஒருவர் கொட்டாவி விட்டால், பக்கத்தில் உள்ளவரும் கொட்டாவி விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் இது அறிவியல் ரீதியா பொதுவான நம்பிக்கை என்பது தான் நமது எண்ணமாக இருக்கும்.
தற்போது ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திவிட்டார்கள் கொட்டாவி விடுபவர் நெருங்கிய உறவினராகவோ, நண்பராகவோ இருந்தால் அது நிச்சயமாகப் பரவும் என்று.
அருகில் உள்ளவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்ப்பவர்களுக்கும் ஏன் கொட்டாவி விடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என்ற கேள்வி நீண்டகாலமாக விஞ்ஞானிகளின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.
தற்போது இத்தாலியின் பைசா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொட்டாவி குறித்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கொட்டாவி விடுபவருக்கும், அவருக்கு அருகில் இருந்து அதைப் பார்ப்பவர் அல்லது கேட்பவருக்கும் உள்ள உறவைப் பொறுத்து கொட்டாவியின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள் இவர்கள்.
நெருங்கிய உறவினகளுடன் பேசிகொண்டிருப்பவர்கள் கொட்டாவி விடுவது அல்லது அதை அடுத்தவருக்குப் பரப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து. இவர்கள் தெரிவிக்கும் கூடுதல் தகவல், குழந்தைகளுக்கு நான்கு அல்லது ஐந்து வயது வரை அடுத்தவரிடம் இருந்து கொட்டாவி தொற்றிக்கொல்வதில்லை. அவர்கள், அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து பழகத் தொடங்கும்போதுதான் கொட்டாவி தொற்றுகிறது.
இதை படித்து விட்டு கொட்டாவி விடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்....
No comments:
Post a Comment