Friday, 12 June 2015

இந்திய கிரிமினல் குற்றங்கள்


      இந்தியாவில் உள்ள 35 பெருநகரங்களில் கிரிமினல் குற்றங்கள் தொடர்பான கணக்பெடுப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதில் டில்லி நகரம் 12வது இடத்தை பெற்றுள்ளது. இங்கு 2௦௦9-ம் ஆண்டில் சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொலையில் 398 கிரிமினல் குற்றங்கள் நடந்துள்ளன. இந்தூர் நகரம் அதிக குற்றங்கள் நடந்த நகரமாக முதல் இடத்தில் உள்ளது. இங்கு 793 குற்றங்கள் நடந்துள்ளன. இதற்கு  அடுத்தபடியாக பரிதாபாத்தில் 429 கிரிமினல் குற்றங்கள் நடந்துள்ளன.

சாலை விபத்து மற்றும் வாகன திருட்டு வழக்குகளில் டில்லி, மற்ற நகரங்களை காட்டிலும் குறைந்த விகிதத்திலேயே உள்ளது. அதாவது 2௦வது இடத்தில் உள்ளது. 2,165 சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 11,982 வாகன திருட்டுகள் நடந்துள்ளன. கொலை குற்றங்களை பொருத்தமட்டில் எட்டு பெரிய நகரங்களுள் டில்லியில் மட்டும் ஒரு லட்சம் மக்கள் தொலையில் 3 சதவீத கொலைகளை நடந்துள்ளன. அதிகபட்சமாக பாட்னாவில் 8.9 சதவீதமும், பரிதாபாத்தில் 6.2 சதவீதமும் நிகழ்ந்துள்ளன.

மும்பையில் தான் குறைந்தபட்சமாக 1.4 சதவீதமாக கொலைகள் நடந்து இருக்கிறது. டில்லியில் நடந்த கிரிமினல் குற்றங்களை கடந்த 2௦ ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொது 2௦௦9-ல் குறைந்த அளவாக 277 குற்றங்கள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய 2௦௦8-ம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 287 குற்றங்கள் நடந்துள்ளன. இதனால் டில்லி குற்றங்கள் குறைந்து வரும் நகரமாக மாறி வருகிறது.

No comments:

Post a Comment