Tuesday, 30 June 2015

எரிமலைகள் தோற்றம்


மலைமீது பிளவை போன்ற ஒரு துவாரம் வழியாக நெருப்பும், புகையும், சாம்பலும் தொடர்ந்து வெளிவந்தால் அதனை எரிமலை என்கிறோம். பூமிக்கடியில் ஏற்படும் பொங்கெலுச்சியினால் இம்மாதிரியான எரிமலைகள் உருவாகின்றன. ஒருமுறை எரிமலை நெருப்பை கக்கத்தொடங்கினால் அதிலிருந்து லாவா எனப்படும் உருகிய தீக்குழம்பு தொடர்ந்து வெளிவரும். எரிமலைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

நிலத்தின் அடியில் கீழே போகப்போக வெப்பநிலை அதிகரிக்கிறது. 3௦ கிலோமீட்டருக்கு அடியில் உள்ள வெப்பம் பாறைகளை கூட உருக்கும் வல்லமை வாய்ந்தது. நிலத்தின் அடியில் உள்ள பாறைகள் உருகும்போது அவை விரிவடைகின்றன. திரவ உருவான இப்பாரைகளை மாக்னா என்கிறார்கள். மாக்னாவில் இருந்து உண்டாகும் அளவிடற்கரிய வெப்பம் நிலத்தை பீரிட்டு வெளிவருவதற்காக அலைமோதுகிறது. பூமியில் எப்பகுதியாவது வலிமை குன்றியிருந்தால் அப்பகுதி பிளந்து அதிலிருந்து உஷ்ணவாயுக்களும், திரவ உருவான பாறைகளும், பாறைத்துகள்களும் வெளிக்கிளம்புகின்றன. இதைத்தான் எரிமலை வெடித்தல் என்கின்றோம்.

பீரிட்டு வரும் புகையும், சாம்பலும் கல் துண்டுகளும் தேர்ந்து லாவா திடப்போருளாகும் போது கோணவடிவு கொள்கிறது. குளிர்ச்சியடையும்போது மலையுருகொல்கிறது.

உள்ளுக்குள்ளே உருகிய பொருட்கள் அனைத்தும் வெளிவரும் வரையில் தீயும், புகையும் தொடர்ந்து வலிந்து கொண்டே இருக்கிறன. லாவா நின்று விட்டால் அதனை இறந்த எரிமலை என்கின்றார்கள்.

தற்சமயம் உலகத்தில் 45௦ எரிமலைகள் உள்ளன. இந்தியாவில் எரிமலைகள் மிகப்பெரியவை. மிகவும் உயரமான எரிமலை அர்ஜென்டினாவில் உள்ளது. இதன் உயரம் 22 ஆயிரத்து 834 மீட்டர். அதாவது 6௦,96௦ அடி.

No comments:

Post a Comment