Tuesday, 30 June 2015

நெருப்பில் இருந்து தப்பிக்க


தீ விபத்துக்களால் ஏற்படும் சேதங்கள் ஏராளம். இந்த ஆபத்துக்களில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்றுவது அவசியம்.

தீ விபத்து நடந்தவுடன் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எண்ணெய், மற்றும் அமிலத்தால் விபத்து ஏற்பட்டது என்றால், அதை அணைக்க மணலை பயன்படுத்த வேண்டும்.

விபத்தின் பொது ஒருவரின் உடலில் தீப்பற்றினால், அவரை கீழே தள்ளி கம்பளம், போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் இறுக சுற்ற வேண்டும். இதனால், தீ பரவாமல் அணைந்து விடும். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் பயந்து ஓடக் கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக எரியும். எனவே தீப்பற்றியவர் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும்.

சூடான பாத்திரங்களை தொடுவதாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விலுவதாலோ, சூடான பொருள் உடலின் மீது விலுவதாலோ ஏற்படும் சிறு புள்ளிகள, கொப்புளங்களை கையால் தேய்ப்பதோ, நகத்தால் கில்லுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷ கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்பு உண்டு. இந்த கொப்புளங்களின் மீது ஆன்டிசெப்டிக் மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.

தீக்காயங்களுக்கு தேன் மிகவும் சிறந்த மருந்து. தீக்காயத்தின் மீது தேன் தடவலாம். முட்டையின் வெள்ளைக்கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும். கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.

தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால், அந்த துணியை அவசரப்பட்டு அகற்றக் கூடாது. இரண்டு ஸ்பூன் சமையல் சோடாவை தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்து போனால் மீண்டும் அந்த நீரை சொட்டுச்சொட்டாக விட்டு நனைக்கலாம்.

தீக்காயம் அடைந்தவர்களுக்கு அடிக்கடி உப்பு கலந்த தண்ணீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் போன்றவற்றை கொடுக்கலாம்.

No comments:

Post a Comment