திருவிழா என்றாலே அது மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு தான். அனால் பழங்காலத்தில் திருவிழாக்களின் கலந்து கொள்ள மனித அடிமைகளுக்கு அனுமதி இல்லை. மேல்தட்டு மக்கள் மட்டும் கொண்டாடும் கொண்டாட்டமாக அது இருந்தது. இந்த முறையை மாற்றி அமைத்து தான் ரியோ-கார்னிவல் என்கிற திருவிழா.
ரியோ-கார்னிவல் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரிக்கும் உற்சாக வார்த்தை இது. கொண்டாட்டங்கள் எல்லாமே மனிதனை மகிழ்விக்க உருவாக்கப்பட்டது தான். அனால் ரியோ-கார்னிவல் மனிதர்களை மட்டுமல்லாது மனித அடிமைகளையும் சந்தோஷப்படுத்தியது. வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த திருவிழாவுக்காக வருடம் முழுவதும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள், பார்வையாளர்கள். இதைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் மேல் மக்கள் விமானம் ஏறுகிறார்கள்.
இது ஒரு பாரம்பரியத் திருவிழா. இதன் தொடக்கம் கிரேக்கர்களிடம் இருந்து வந்தது.
கிரேக்கர்களும் ரோமானியர்களும் வசந்தகாலத்தின் வருகையை வரவேற்று வழிபாடும் முறை இருந்தது. எதுவே பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கலில் நன்றி சொல்லும் திருவிழாவாக இருந்தது. முகத்தில் முகமூடியை மாட்டிக் கொண்டு வீதிகளில் ஆடி வரும் முறை அப்போது உருவானது தான்.
பாரிசில் எப்படி நடந்த ஒரு திருவிழாவைப் பார்த்து பரவசம் அடைந்த வணிகர்கள் 1850-ல் பிரேசிலுக்கு இதை கொண்டு வந்தனர். பிரேசில் அப்போது போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது. ஏழை பணக்காரர்கள் பிரிவு இருந்தது. ஆண்டான், அடிமை முறை இருந்தது. இந்த வித்தியாசம் இந்த திருவிழாவில் ஒழிக்கப்பட்டது. அதனால் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாராரண உடையில் வளம் வருவதும் சகஜமாக நடந்தது. உலகில் இப்படியொரு திருவிழா எந்த நாட்டிலும் இருந்ததில்லை.
அதனால் இந்த திருவிழா ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்டு வந்திருந்த அடிமைகளுக்கு சொர்க்கமாகத் தெரிந்தது. அதில் தங்களின் பூர்வீக இசையான சம்பா இசையையும் நடனத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரியோ திருவிழா வேறு வடிவம் கொண்டது. பழைய இசை மறைந்து நவீன இசைக்கருவிகள் சேர்ந்து கொண்டன. மிகக்குறைந்த உடை அல்லது நிர்வாணமாக பெண்கள் நடனமாடி வருவது அதிகரித்தது. பிரேசிலின் 2-வது மிகப்பெரிய நகரமான ரியோ-டி-ஜெநிரோவில் இன்றளவும் எந்த அடிமைகளின் திருவிழா பிரசித்தம் என்பதுடன் கிளுகிளுப்பான ஒன்றாகவும் மாறி விட்டது இதற்காகவே, ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் திருவிழாவின் பொது மக்கள் குவிகிறார்கள்.
No comments:
Post a Comment