உலகிலேயே மிகப்பெரிய மலையான இமயமலை ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்று சொன்னால், நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தற்போது இமயமலை இருக்கும் பகுதியில் 'டெத்தீஸ்' என்ற கடல் இருந்தது. அப்போது பூமிக்கு அடியில் ஏற்பட்ட பெரும் அழுத்தத்தின் காரணமாக இந்திய தட்டு வடகிழக்கு திசையில் நகர்ந்து, 'டெத்தீஸ்' கடலின் வடபுறம் இருந்த ஆசிய தட்டுடன் முட்ட, இதனால் பூமியின் நிலப்பகுதி பிதுங்கிக்கொண்டு மேலே வர, 'டெத்தீஸ்' கடல் தூர்ந்து போய் இமயமலை உருவானது.
11௦ ஆண்டுகளுக்கு முன் 1905-ம் ஆண்டு இமயமலை பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா அருகேயுள்ள பகுதியை மையமாக கொண்டு 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 2௦ ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்தனர்.
அப்போது ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக பூமிக்கு அடியில் உள்ள இந்திய பாறை தட்டில் 6௦௦ கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளவு ஏற்பட்டதாக பூகம்பவியல் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர். கடந்த 2௦௦4-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக, அங்கிருந்து மியன்மாரின் மேற்கு கடற்கரை நன்காலதேசம் வழியாக இயமமளியின் கிழக்கு முனை வரை பூமிக்கு அடியில் 1,௦௦௦ கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளவு ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
பூமிக்கு அடியில் உள்ள இந்திய தட்டும், யுரேசியா தட்டும் அடிக்கடி உரசிக்கொல்வதால் இந்திய தட்டின் சில பகுதிகள் பலவீனம் அடைந்து இருப்பதாகவும், 2௦௦1-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி குஜராத் மாநிலத்தில் இர்பட்ட பூமி அதிர்ச்சிக்கும், கடந்த 2௦-ந் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்துக்கும் இதுதான் காரணம் எனவும் பூலோகவியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் அடிக்கடி உரசிக்கொல்வதாலும், பூகம்பங்கள் ஏற்படுவதாலும் இந்திய நிலப்பகுதி சிறிது சிறிதாக வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் உள்ள இந்திய மற்றும் உரேசிய டேக்டணிக் தட்டுகள் உரசிக் கொள்வதன் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் இமயமலையின் சில பகுதிகள் ஆண்டுக்கு 1 சென்டி மீட்டர் வரை உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.
கடந்த 25-ந் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலை பகுதிகள் சுருங்கி இருப்பதாக ஐரோப்பாவின் சென்டினல்-1ஏ செயற்கை கொள் ரேடர் மூலம் கண்டறியப்பட்டு இருப்பதாக யுனாவ்கோ பூலோக விஞ்ஞா ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 2.5 சென்டி மீட்டர் குறைந்து இருக்கிறது.
அதே சமயம் நேபாள நாட்டில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோ மீட்டர் நீளமும், 50 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட நிலப்பகுதி 3 அடி வரை உயர்ந்து இருப்பதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் புவீயர்பியலாளர் டிம் ரைட் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலப்பகுதி உயர்வு காத்மாண்டுவுக்கு மிக அருகே இருந்ததால்தான் அந்த நகரம் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேரிட்டது என்றும் அவர் கூறி உள்ளார்.
இந்தியாவில் இமயமலை பகுதியில் உள்ள காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களின் வடபகுதிகள், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி, மராட்டியம், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் தீவு ஆகிய பகுதிகள் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள இடங்களாக கருதப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
No comments:
Post a Comment