உப்புத்தின்பவன் தண்ணீர் குடிப்பான் எனும் மூதுரை பண்டைக் காலத்திலிருந்தே கூறப்பட்டு வருகின்றது. இதில் மறைந்திருக்கும் பொருள் வேறு தான் என்றாலும் உப்puத்தின்பவன் தண்ணீர் குடிக்கத்தான் செய்வான் என்பது அறிவியல் வெளிப்படுத்துகிறது.
உடலின் கோசங்களில் அடங்கியிருக்கும் நீர் சிறுநீரகத்துக்குச் செல்வதை ஊக்குவிப்பது உப்பாகும். நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் எல்லாமே உப்பு குறைந்தும் கூடியும் இருக்கும். சிருநீருகத்தில் உடலிலுள்ள அசுத்தங்களை அகற்றும் செயல்பாடு நிகழ்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
உணவில் உப்பு அதிகமாகும் பொது அல்லது தனியாக உப்பைத் தின்னும் பொது உடலின் கோசங்களிலிருந்து சிறுநீரகத்துக்குச் செல்லும் நீரின் அளவு மிக உயருகின்றது, இவ்வாறு நிகழும் பொது உடலின் கோசங்களில் நீரின் குறைவு அனுபவப்படும். இதனால் உடன் தாகம் அதிகரித்து தண்ணீர் குடிப்பது மிக அவசியம் என்ற நிலை உருவாகின்றது.
இதிலிருந்து உப்புத்தின்பவன் தண்ணீர் குடிப்பான் என்ற மொழியும் உருவானது.
No comments:
Post a Comment