Sunday, 7 June 2015

பயங்கரமான அணு ஆயுதம்


       அணு ஆயுதங்கள் ஒரு விசை அழுத்தத்தில் மொத்த உலகையும் அளித்து விடுபவை. இந்த விளைவுகளை அறிந்தும், அதை அனுபவித்த பிறகும் மனிதன் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் கொல்லி, அணு ஆயுதம். இதில் 5-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களை சரியாகப் பொருத்தினால் ஒட்டு மொத்த உலகையும் ஒரு முறை அளித்து விடலாம்.

      அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்களால் மட்டும் எந்த உலகத்தை 27 முறை முழுவதுமாக எரிக்க முடியும். உலகெங்கும் உள்ள அணு ஆயுதங்களை ஒன்றன்பின் ஒன்றாக வடிக்க வைத்ததால் உலகை 1௦௦ முறை முழுவதுமாக எரித்து விடலாம்

   இந்த உலகமே கொடூரமான அணு ஆயுதங்களால் நிரம்பி இருக்கிறது. உலகில் குவிந்து கிடக்கும் ஒட்டு மொத்த அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தால் சூரிய குடும்பத்தின் அமைப்பே மாய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

     ஒரு வேளை மூன்றாம் உலகப் போர் என்ற ஓன்று உருவானால், இந்த உலகில் கரப்பான் பூச்சியை தவிர வேறு எந்த உயிரினமும் இருக்காது. ஒரு தீவிரவாத இயக்கத்திடமோ, ஒரு சைக்கோ கொலையாளி கைலோ அணு குண்டு கிடைத்தால் அல்லது அதைத் தயாரிக்கும் தொழில் நுட்பம் பற்றி தெரிந்தால் அன்றைய தினம் தான் உலகின் இறுதி கவுன்ட்-டவுன் ஆரம்பம்.

       ஒரு அணுகுண்டு தயாரிக்கும் செலவில் 3.5 லட்சம் ஆரம்பப் பள்ளிகளை கட்டலாம் என்றார். இந்திராகாந்தி, இதுவரை ஆயுதம் வாங்கிய பணத்தில் அரிசி வாங்கி இருந்தால், இந்த நாட்டில் பசியே இருந்திருக்காது என்பது ஒரு சினிமாவின் வசனம். இரண்டுமே நடக்கவில்லை. வல்லரசு ஆக வேண்டும் என்ற கோஷமும் ஓயவில்லை.

No comments:

Post a Comment