இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் காணப்படும் 'ஸ்டோன்ஹெஞ்ச்' என்ற பெரிய பெரிய கற்பாறை நடுகைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை புரியாத புதிராகவே இருந்து வந்தன.
அவை, வேறு கிரகங்களைச் சேர்ந்தவர்களால் பூமியில் நடப்பட்டுச் செல்லப்பட்டவை, பண்டைய அகிப்தியர்களால் அமைக்கப்பட்டவை, சூரியக் கோவில், வைத்திய தளம் என்று பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்தன.
தற்போது அதையெல்லாம் மறுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அந்த இடம், பிரிட்டனில் மோதிக் கொண்டிருந்த பலன்குடியினத்தினர் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்குவதன் அடையாளமாக ஏற்படுத்தப்பட்டது என்று உறுதியாக அறிவித்திருக்கிறார்கள். சுமார் பத்தாண்டு கால ஆராய்ச்சிக்குப் பின் இந்த முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
கற்காலத்தின் முடிவில், ஆதிகால விவசாயக் குடும்பங்களால் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கிறார், 'ஸ்டோன்ஹெஞ்ச்' குறித்த ஆய்வில் ஈடுபட்ட ஷெப்பீல்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்பார்க்கர்.
இதன்மூலம், உலக அளவில் ஆராய்ச்சியாளர்களை நீண்டகாலமாக மண்டையை உடைத்துக்கொள்ள வைத்த புதிர் விடுபட்டிருக்கிறது.
No comments:
Post a Comment