Monday, 8 June 2015

முருங்கைகாயின் முக்கியத்துவம்


வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைகாயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும்.

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊரும். அதோடு பல் கெட்டிப்படும். தோல் நோய்கள் நீங்கும்.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். மேலும், தாது விருத்தியும் உண்டாகும்.

முருங்கை இலைச் சாருடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால் ரத்தம் சுத்தமாகும், எலும்புகள் வலுவாகும். கர்ப்பிணிப் பெண்களும் இதை உட்கொண்டு வரலாம்.

முருங்கை இலை காம்புகளை நறுக்கி, மிளகு ரசம் வைத்து, சாப்பாட்டுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். அதேவேளையில் அது சிறுநீரைப் பெருக்கும்.

No comments:

Post a Comment