Monday, 8 June 2015

பயம் வயதாக்கும்


            அமைதியாக இருப்பவர்களை விட பயப் படபடப்புடன் இருப்பவர்களுக்கு வேகமாக முதுமை வரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

   அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் மகளிர் நல மருத்துவமனை ஆய்வாளர்கள் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.

      அவர்கள், மத்திய வயது அல்லது முதிய வயதுப் பெண்கள் மத்தியில், கூட்டம், உயரம், வெளியுலகம் ஆகியவற்றைப் பார்த்து ஏற்படும் காரணமற்ற பயமான 'கோபிக் ஆண் சைட்டி'க்கும், குட்டையான 'டேலோமீயர்களுக்கும்' தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.

     ஜீன்களைத் தாங்கும் குரோமோசோம்களின் முடிவில் காணப்படும் 'மூடிகள்' தான் டேலோமீயர்கள். நமது மரபணுப் பொருள் சேதப்படாமல் காப்பவை இவைதான். உயிரியல்றீதியான அல்லது செல்றீதியான முதிர்வை சுட்டிகாட்டுபவை எந்த டேலோமீயர்களே.

     குட்டையான டேலோமீயர்களுக்கும், புற்று நோய், இதயநோய், டிமென்சியா ஏன், இறப்புக்கும் கூட தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.

   தற்போதைய புதிய ஆய்வுக்காக ஆய்வாளர்கள், 42 வயதுக்கும் 69 வயதுக்கும் உட்பட்ட 5 ஆயிரம் பெண்களிடம் இருந்து ரத்த மாதிர்களைப் பெற்றனர். அவர்களிடம் எந்தெந்தப் பயன்கள் இருக்கின்றன என்ற கேள்வித் தாளையும் அப்பெண்களை நிரப்பக் கூறினார். அப்போது, அதிகம் பயம் உள்ளவர்களுக்கு, டேலோமீயர்களின் அளவு குட்டையாக இருந்தாது தெரியவந்தது.

 அதிகப் பயம் உள்ள பெண்களுக்கும், பயமில்லாத பெண்களுக்கும் டேலோமீயர்களின் அளவில் தெளிவான வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment