Wednesday, 17 June 2015

பெட்ரோல் ஆசை


ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடு சூடான். அந்த கண்டத்தில் மிக ஏழ்மையான நாடும் அதுதான். அங்கே 12 மொழிகளும், 57௦ இனங்களும் உள்ளன. 1956-ல் பிரிட்டனிடமிருந்து சூடான் சுதந்திரம் பெற்றது. அப்போதிருந்தே வடக்கு-தெற்கு இடையே மோதல் இருந்து வந்தது. 1972-ல் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்திற்கு பிறகு மோதல்கள் சற்று கட்டுபட்டன.

அந்த காலகட்டத்தில் நிறைய பெட்ரோல் கிணறுகள் சூடானில் கண்டுபிடிக்கப்பட்டன. சூடான் முழுவதுமே இனி ஒரே இனத்தின் ஆட்சிதான் என்று அறிவித்தது. பெட்ரோல் வளத்தால் கிடைத்த வருமானம், சூடானை தலைகால் புரியாமல் ஆட வைத்தது. இதனால் வெடித்த வடக்கு-தெற்கு இனக்கலவரத்தை ஒடுக்குவதிலேயே அரசு கவனம் செலுத்தி வருகிறது, அரசு. கலவரத்தில் இதுவரை 2 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். 4 கோடிப்பேர் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சீனாவும், சூடானும் நெருங்கிய நண்பர்கள். சீனாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனம் ஒரு கோடி டாலரை சூடானுக்கு நன்கொடையாக அளித்தது.  சீனாவுக்கு சூடான் தேவை. சீனாவில் உள்ள பெட்ரோலிய கிணறுகள் வற்றத் தொடங்கி விட்டன. அதனால் வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் சூடான் வசமாக வந்து மாட்டிக்கொண்டது. சீன நிறுவனங்கள் சூடானில் நீண்ட பைப்லைன்களை அமைத்துள்ளன. தடையில்லாமல் சூடானிடம் இருந்து பெட்ரோல் கிடைக்க வேண்டும் என்பதற்காக கணக்குவழக்கில்லாமல் ஆயுதங்களை அளித்து வருகிறது, சீனா.

சூடான் அரசு தனது அடக்குமுறையை மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் சீனா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்குத்தான் பெட்ரோல் வளத்தால் ஆதாயமே தவிர சூடானுக்கு அல்ல. தங்களது பங்கு லாபத்தில் பிற நாடுகள் கொழிக்க, சூடான் நாடோ தனக்கான பங்கை போராட்டங்களை ஒடுக்குவதிலேயே செலவழித்து வருகிறது. ஆக பெட்ரோல் இருந்தும், சூடானுக்கு எந்த லாபமும் இல்லை. அமைதியை இழந்ததுதான் மிச்சம்.

சூடானுக்கு ஆயுதம் தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியும் சீனா பெட்பதாக இல்லை. சூடான் அரசின் நடவடிக்கைகளை அது விவாதிக்கவும் இல்லை. பெட்ரோல் என்ற ஒரு காரணத்திற்காகவே இத்தனை கலவரங்களும் நடக்கின்றன.

No comments:

Post a Comment