மறு ஜென்மம் உள்ளதா ? இல்லையா ? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மரணத்தின் மறுப்பக்கம் எப்படி இருக்கும் என்பதை பலரிடம் ஆராய்ந்து அது எப்படித்தான் இருக்கும் என்று தகவல் தருகிறார்கள், ஆய்வாளர்கள்.
அதன்படி நான் இறந்துவிட்டேன் என்று உணர்வதுதான் முதல்நிலை. அதன்பின் பூமியில் இருந்து வெளியேறி விண்வெளியில் சுற்றிச்சுழல்வது போல் உணர்தல் இரண்டாம் நிலை, உடலைவிட்டு விலகி வெளியே சென்று பார்ப்பது போன்று உணர்தல், உடலைச்சுற்றி டாக்டர்கள், உறவினர்கள் நிற்பதை பார்ப்பது மூன்றாம் நிலை.
மிக அமைத்தான, வெளிச்சம் குறைவான சுரங்கத்திற்குள் போய்கொண்டே இருப்பது போல் உணர்தல் - இது நான்காம் நிலை, கண்ணை கூசவைக்கும் அதீதமான வெளிச்சசத்தை நோக்கி மெதுவாக பறப்பது போன்று உணர்தல் 5-ம் நிலை. வெண்மையான அல்லது வெள்ளை நிற உடை அணிந்த ஆணோ, பெண்ணா என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உருவங்களை பார்ப்பது 6-ம் நிலை. ஒருவர் வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களும் அவர் கண்முன்னால் வந்து செல்வது 7-வது நிலை.
கீழே கிடக்கும் தன உடலுக்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையும், வேண்டாம் என்ற வெறுப்பும் மாறி, மாறி தோன்றுவதுதான் கடைசி நிலை. இந்த நிலையில் ஒருசிலரால் மீண்டும் உடலுக்குள் நுழைந்துவிட முடியுமாம். இறந்ததாக நினைத்து சுடுகாடுவரை எடுத்துச் சென்று, பின்னர் நினைவு திரும்பிய சம்பவங்கள் இதன் தாக்கம் தான்.
இந்த உணர்வுகள் பெற்ற எல்லாருமே மறுபடி உயிர் திரும்பும் போது ஏதோ மறுபிறவி அடைந்தது போன்று உணர்கிறார்கள். செய்த தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்கள். இதற்கு மேல் தவறுகள் எதுவும் செய்வதில்லை என்று உறுதியும் எடுத்துக் கொள்கிறார்கள்.
அனால் மரணத்த்தின் மறுபக்கமாக உள்ள மீண்டும் உயிர்ப்பு என்பது, மரணத்தை விட மனித வாழ்வை உணர வைக்கிறது.
No comments:
Post a Comment