இன்றைய உலகை அச்சுறுத்தி வருவது புவி வெப்பமயமாதல் பிரச்சினைதான். இதற்காக உலக நட்டுகள் ஓவொன்றும் ஏகப்பட்ட வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது. வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் அதிகளவில் வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு தான். அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மிக அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றன. அது சுற்றுச்சுழலை பெரிதும் பாதித்து வெப்பநிலையை கூட்டுகிறது. ஆனால் உலகிலேயே மிகக் குறைந்த அளவில் கார்பனை வெளியேற்றும் நாடக இந்தியா இருக்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகை 12௦ கோடி என்றாலும் ஒவ்வொரு தனிநபரும் 1.7 டேன் கார்பன்-டை-ஆக்சைடை சராசரியாக ஒரு வருடத்திற்கு வெளியேற்றுகிறார்கள். இந்த அளவையும் 2௦2௦-ம் ஆண்டுக்குள் 2௦ முதல் 25 சதவீதம் வரை குறைக்க உறுதி எடுத்துள்ளது, இந்தியா. இதனால் இந்தியா மேலும் முன்னணி பெரும் என்று நம்பப்படுகிறது.
ஸ்டாக்ஹோம் நிறுவனம் சமிபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி கார்பன் கழிவுகளின் அளவை குறைப்பதற்கு உலக நாடுகள் உறுதி அளித்துள்ளன. அந்த உறுதிமொழியின்படி வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகள் அதிக அளவில் அறிக்கை கூறுகிறது. அதில் இந்தியா மிகவும் முன்னணியில் உள்ளது. அதனால் புவி வெப்பமயமாதலுக்கு இனி எந்த ஒரு நாடும் இந்தியாவை குறைகூற முடியாது என்ற நிலை உலக அளவில் ஏற்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் விஷயத்தில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமை இது.
No comments:
Post a Comment