Tuesday, 9 June 2015

காது நோயால் மரணம்


ஒரு மனிதர் திடீரென்று மரணமடைந்தால், அது மாரடைப்பாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மேனியர் நோயாக கூட இருக்கலாம். இதை கண்டுபிடித்தவர், பிராஸ்பர் மீனியர் என்ற பிரெஞ்சு டாக்டர். இதனால் இந்த நோய்க்கு அவர் பெயரே வைத்து விட்டனர்.

நமது உள்காதில் எண்டோளிம்ப் என்ற திரவம் உள்ளது. அந்த திரவத்தில்தான் ஒலியைஉணரக்கூடிய நரம்புகள் மிதக்கின்றன. எந்த திரவம் திடீரென்று அதிகமாக சுரக்கும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. அப்படி அதிகமாக சுரந்தால், மயக்கம் ஏற்படும்.

தலை அசையும் பொது உள்காதில் உள்ள எண்டோளிம்ப் திரவமும் அசைகிறது. இந்த அசைவு அந்த திரவத்தில் மிதக்கும் உணர்வு நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. திரவம் அதிகமாக சுரக்கும்போது, உணர்வு நரம்புகள் அதிகம் பாதிக்கப்பட்டு நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறது.

இந்த நோய் யார்-யாரை பாதிக்கும் என்று சொல்ல முடியாது.எந்தவித முன் அடையாளங்களும் இன்றி திடீரென்று நோய்தாக்கும். மீனியர் நோய் தாக்கியதும், தலைசுற்றி சடாரென்று கீழே விழுந்துவிடுவார்கள்.

இதுதவிர காது இரைச்சல், காது கேளாமை போன்றவையும் சேர்ந்து கொள்ளும், இந்த தாக்குதல் 2௦ நிமிடங்கள் வரை நீடிக்கும். பின்னர் சாதாரண நிலைக்கு திரும்பி விடுவார்கள். சிலருக்கு இந்தநோய் தாக்குதல் 2 மணி நேரம் கூட நீடிக்கும். சிலருக்கு நோய் குணமான பின்னரும் கூட நாள் கணக்கில் தடுமாறுவார்கள்.

மீனியர் அட்டாக் ஒருமுறை வந்து விட்டால் அப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரும். இதனால் இவர்கள் டிரைவிங் செய்யக்கூடாது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, பிறரின் உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

இந்த நோயில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? இருக்கிறது. இந்த நோய் தாக்கியவர்கள், சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.  ஒருமுறை அட்டாக் வந்தவர்கள் உப்பு மட்டுமின்றி, மது, புகையிலை போன்றவற்றையும் தொடக்கூடாது. மீனியர் அட்டாக்கை குணப்படுத்த சில மாத்திரைகள் உள்ளன. தேவைப்பட்டால் ஆபரேஷன் மூலமும் குணப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment