அருவியிலும், ஆற்றிலும் குளிப்பது சுகமான விஷயம். இத்தகைய இடங்களை தேடி பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து குவியும் மக்கள் இருக்கிறார்கள். அதிலும் அருவியும், இயற்கையாக அமைந்த நீச்சல்குளமும் ஒரே இடத்தில் இருந்தால் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா? அப்படி அமைந்த ஒரு இடம் தான் ஆப்பிரிக்காவின் ஜாம்பியா நாட்டில் விக்டோரியா அருவியின் உச்சியில் உள்ள இயற்கை நீச்சல்குளம்.
உலகத்தின் மிக அபாயகரமான இயற்கை நீச்சல்குளம் இது. கொஞ்சம் அசந்தால் மரணம் என்பதால் இந்த குலத்திற்கு சாத்தான் குளம் என்று பெயர் வைத்துள்ளார்கள். 128 மீட்டர் உயரம் கொண்ட விக்டோரியா அருவி விழுகிற மலை உச்சியில் இருக்கிறது இந்த சாத்தான்குளம். ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த சாகச பிரியர் ஒருவர் இந்த இடத்தை கண்டுபிடித்தார்.
மலை உச்சியில் இயற்கையாகவே பாறைகள் ஒரு தொட்டியை அமைத்திருக்கிறது. அதன் நடுவே தேங்கி இருக்கும் தண்ணீரில் குளிப்பது திகிலான அதே சமயம் த்ரில்லான அனுபவம். இங்கிருந்து ஓர் அடி எட்டிப்பார்த்தால் கூட பள்ளம் படுபயங்கரமாக தெரியும். இப்படி டெற்றரான இயற்கை அமைப்பு இருப்பதாலேயே சாகச பிரியர்கள் மத்தியில் சாத்தான் குளம் பிரபலமாகிவிட்டது.
இந்த இயற்கை குளத்துக்கு செப்டம்பர் முதல் டிசம்பர் மாசம் தான் சீசன். இதனால் கிறிஸ்துமஸ் நேரத்தில் குடும்பத்தோடு குளிக்க வருகிறார்கள் மக்கள். திடீர் வெள்ளம் வந்தாலோ, பாறை உடைந்தாலோ அருவியோடு அருவியாக அதலபாதாளத்தில் விழ வேண்டியதுதான்.
சாகசம் என்பது, உயிரோடு விளையாடுவது தானே.
No comments:
Post a Comment