Wednesday, 17 June 2015

M.P க்கு என்னென்ன கிடைக்கும்?


     இந்தியா ஒரு ஏழை நாடு என்றுதான் உலகம் அழைக்கிறது. அந்த எளை நாட்டு எம்.பி. ஒருவருக்கு அரசு கொடுக்கும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?

        எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு மாதச்சம்பளம் ரூ.50 ஆயிரம். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் ஒவ்வொரு முறையும் அந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்கு தினசரி ரூ.2,௦௦௦ அலவன்ஸ் வழங்கப்படும்.

  ஒரு எம்.பி. ஆண்டுக்கு 34முறை இலவச விமான பயணம் செய்து கொள்ளலாம். அந்த பயணத்தின் பொது எம்.பி. தனது மனைவியையோ, கணவரையோ அல்லது உறவினர் ஒருவரையோ உடன் அழைத்துச் செல்லலாம். எம்.பி. தனது தொகுதியை விட்டு டெல்லியில் தங்கியிருக்கும் போது அவரை சந்திபதற்காக அவருடைய மனைவி அல்லது எம்.பி.பெண்ணாக இருந்தால் அவருடைய கணவர் ஆண்டுக்கு 8 முறை இலவசமாக விமான பயணம் மேற்கொள்ளலாம்.

       எம்.பி.தனது அடையாள அட்டையை காண்பித்து எந்த நேரத்திலும், எந்த ரெயிலிலும் ஏ.சி. முதல் வகுப்பு அல்லது 'எக்சிகியுட்டிவ்' வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்தியாவுக்கு வெளியே செல்லும்போது ஒரு எம்.பி.க்கு முதல் வகுப்பு ரெயில், விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.

          வாடகைக் கட்டணம், பொருத்துதல் கட்டணம் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் கட்டணம் எதுவும் இல்லாமல் அரசாங்க வீடு ஓன்று டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வீட்டில் எம்.பி.ஆண்டுக்கு 5௦ ஆயிரம் யூனிட் மின்சாரத்தையும், 4௦ ஆயிரம் லிட்டர் தண்ணீரையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

      மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு எம்.பி.மாதத்திற்கு ரூ.5௦௦ செலுத்தி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.

        ஒரு எம்.பி.க்கு அவரது அலுவலக செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் வழங்கப்படும். அவரே 5 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி. யாக இருந்திருந்தால் அவருக்கு கூடுதலாக ரூ.1,5௦௦ ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்படி ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.யாக இருந்தால் அவருக்கு மாதந்தோறும் ரூ.21,5௦௦ ஓய்வுதியமாக கிடைக்கும்.

         எல்லா அரசியல் கட்சிகளுமே இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்கின்றன. அந்த இளைஞர்கள் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டிருப்பார்கள். அரசியலில் இறங்கலாமா, வேண்டாமா என்ற முடிவு அவரவர் மனநிலையை பொறுத்தது.

No comments:

Post a Comment