Sunday, 12 July 2015

1௦௦ மீட்டர் கரையான் புற்று


கரையாங்களுக்குப் பார்வை கிடையாது. மேலும் இவை வெறும் 12 மி.மீ. நீளமே இருந்தாலும் மற்ற எல்லா பூச்சிகளையும்விட வசிப்பிடம் அமைப்பதில் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்களாக விளங்குகின்றன.

எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவில் உள்ள கரையான்கள், மண் மற்றும் கழிவுப்பொருட்கள் சேர்ந்த கலவையைக் கொண்டு 12 மீட்டர் உயரத்துக்குத் தமது வசிப்பிடத்தை அமைக்கின்றன. கிரோசி என்ற விஞ்ஞானி, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தின் அடியில் 1௦௦ மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு கரையான் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்தார்.

மிக அழகான புற்று அமைப்பதிலும் கரையான் மிகவும் பெயர் பெற்றது. அது ஈரமான சுற்றுப்புறங்களில் மட்டும் தான் வாழ முடியும் என்பதால் தனது வசிப்பிட புற்றுகளை தரையின் அடியில் 4௦ மீட்டர் ஆழமுள்ளதாகவும், நீரோட்டம் உள்ள இடத்திலும் அமைக்கிறது.

No comments:

Post a Comment