அமெரிக்க கோடிசுவரரான ராக்பெல்லிரிடம் தங்கள் கல்லூரிக்கு ஒரு வகுப்பறை கட்டுவதற்கு நன்கொடை கேட்பதற்காக ஒரு மாணவர் குழு சென்றது.
அப்போது ராக்பெல்லர் ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொண்டு அந்த ஒளியில் எதையோ படித்துக் கொண்டிருந்தார். மாணவர்களை கண்டதும் அவர்களை வரவேற்ற ராக்பெல்லர் அமரச் சொன்னார்.
மாணவர்கள் அமர்ந்த உடனே மெழுகு திரியை அணைத்துவிட்டார்.
"மெழுகு திரியை ஏன் அனைத்துவிட்டீர்கள்?" என்று மாணவர்கள் வியப்புடன் கேட்டனர்.
"நாம் ஒருவருக்கொருவர் உரைடாடும் போது நமது குரல் ஒளியைத்தானே வழிமாற்றிக் கொள்ள இருக்கிறோம்? அப்போது மெழுகுவர்த்தி ஒளி தேவையில்லை. அது ஒரு வீண் செலவு என்றுதான் மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டேன்" என்றார் ராக்பெல்லர்.
'இத்தகைய கடைந்தெடுத்த கஞ்சனா வகுப்பறை கட்டப் பணம் கொடுக்கப் போகிறார்?' என்று மாணவர்கள் நினைத்தார்கள்.
வகுப்பறை கட்டுவதற்கான முழுச் செலவு இரண்டு லட்சம் டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ராக்பெல்லர் ஒரு நூறு அல்லது இருநூறு டாலராவது கொடுத்தால் அதுவே பெரிய காரியமாக இருக்கும் என்று மாணவர்கள் நினைத்தார்கள்.
எனவே மாணவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தைத் தயக்கத்தோடு ராக்பெல்லரிடம் தெரிவித்தனர்.
"அப்படியா மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மேற்கொண்டிருப்பது கல்விப் பணி. நாட்டில் கல்வி வளர்ச்சி ஒரு அத்தியாவசியமான தேவையாகும். அதனால் வகுப்பறை கட்டுவதற்கான முழுச் செலவையும் தான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு ராக்பெல்லர் இரண்டு லட்சம் டாலருக்கான காசோலையை மாணவர்களிடம் கொடுத்தார்.
மாணவர்கள் அடைந்த இன்ப அதிர்ச்சி, மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்....
No comments:
Post a Comment