Sunday, 12 July 2015

விசித்திர எலி


        லெம்மிங் எனப்படும் நீண்ட வாலுடைய எலி போன்ற சிறிய பிராணி நார்வே நாட்டில் உள்ளது. இந்தப் பிராணியின் நான்கு வருட வாழ்க்கைச் சக்கரம் விசித்திரமானது.

         இவை முதல் வருடத்தில் நிதானமாக இனப் பெருக்கம் செய்கின்றன. இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் அது வேகமாகிறது. நான்காவது வருடத்தில் குட்டி போட்டுக் கொண்டே இருக்கின்றன.

     ஏராளமாகப் பெருகியதும் லெம்மிங் எலிகளுக்கு ஒரு வகைப் பீதி ஏற்பட்டுவிடுகிறது. லட்சக்கணக்கில், வாழ்வதற்கு ஏற்ற இடங்களைத் தேடி அவை புறப்படுகின்றன.

       அமைதியான நீர்ப் பரப்பில் இவற்றால் நீந்த முடியும். ஆனால் சிறு அலையடித்தாலும் மூழ்கிவிடும். இவ்வாறு லட்சக் கணக்கில் உயிர் துறக்கின்றன.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment