விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக பரிசுத் தொகை பெறுவது சாதாரண விஷயம். ஆனால் ஒரு வீரர் இன்னொரு வீரருக்கு பரிசளிப்பது அசாதாரணம். அதை செய்து சபாஷ் பெற்றிருக்கிறார், சாய்நா நெவால்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரே இந்திய வீரரான கிரிஜா நாகராஜா கவுடாவுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து 2 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார் சாய்னா.
ஒரு தொழிலாளியின் வழியை சக தொழிலாளிதான் அறிவார் என்ற உண்மையை போல, ஒரு விளையாட்டு வீரரின் வலி, சக வீரருக்கே தெரியும் என்று கூறும் வகையில் பேசுகிறார் சாய்னா.
"எங்களுக்கு வலி ஏற்பட்டாலே இயல்பாக ஆட முடியாது. ஆனால் கிரிஜாவோ உடல் குறைவுடன் இவ்வளவு உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இங்கே பணத்துக்கு அர்த்தமில்லை. விளையாட்டின் மீதுள்ள நேசத்தால் தான் நான் இந்தத் தொகையைக் கொடுத்திருக்கிறேன்" என்று நெகிழ்ந்து, உணர்ந்து பேசுகிறார் சாய்னா நெவால்.
No comments:
Post a Comment