Sunday, 12 July 2015

யானையின் பாசம்


        மொகலாய அரசர் ஷாஜகானிடம் ஒரு பட்டத்து யானை இருந்தது. காளிக்நாத் என்பது அதன் பெயர். ஷாஜகான் அந்த யானையை மிகவும் நேசித்து வந்தார். யானையும் அவரிடம் மிகவும் பாசமாக இருந்தது.

         ஒரு தடவை அவுரங்கசீப் போர் முனையில் ஷாஜகானை வென்று சிறையில் அடைத்தார். பட்டத்து யானையும் ஷாஜகானைப் பின் தொடர்ந்து தானாகவே சிறைக்குள் சென்றது.

                சிறைச்சாலைக்குள் இருந்து சிறை ஜன்னல் வழியாக தாஜ்மகாலைப் பார்த்தவாறே ஊண், உறக்கமின்றிக் கிடந்தார் ஷாஜகான். யானை காளிக்நாத்தும் உணவு உட்கொள்ளவில்லை. தாஜ்மகாலை பார்த்த நிலையிலேயே ஒருநாள் ஷாஜகான் உயிரை விட்டார்.

அதே சமயம், பட்டத்து யானை காளிக்நாத்தின் உயிரும் பிரிந்தது.......

No comments:

Post a Comment