கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் அஸ்திவாரம் பலமாக போட வேண்டும். ஒரு கட்டிடத்தின் வலிமையே அஸ்திவாரத்தை நம்பித்தான் உள்ளது. ஆனால் அந்த அஸ்திவாரமே வேண்டாம். ஆனாலும் கட்டிடம் கட்டலாம் என்று யுரிவிளாசங் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த முறையை பயன்படுத்தி நோஒசி பிர்ஸ்க் என்ற இடத்தில் குடியிருப்புகளை கட்டியுள்ளார். அந்த இடம் களிமண்ணும், மணலும் கொண்ட பரப்பு. அங்கு 16 மீட்டர் ஆழம் தோண்டினால் மட்டுமே அஸ்திவாரம் அமைக்க முடியும் என்று தீர்மானித்தனர். ஆனால் 11 மீட்டருக்கு மேல் தோண்ட முடியவில்லை தோண்ட முடியவில்லை. கடும் பாறைதான் இதற்கு காரணம்.
அது போன்ற சமயங்களில் 16 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டாமல் மண்ணை அழுத்தி கடினமாக்கலாம். கட்டிடம் மண்ணை அழுத்தும் போது மண் உறுதியாக இருந்து கட்டிடத்தை தாங்கும் என்று யுரிவிளாசங் தெரிவித்தார்.
யுரிவிளாசங் கண்டுபிடித்த இந்த முறைப்படி 12 அல்லது 14 டன் எடை கொண்ட இரும்பு சிலிண்டரை கிறேன் மூலம் 15 மீட்டர் உயரத்திற்கு தூக்கி வேகமாக கீழே இறக்க வேண்டும். அப்போது பூமியில் 3 மீட்டர் ஆழமுள்ள குழி ஏற்படும். அந்த குழியை மண்கொண்டு நிரப்பி மீண்டும் கிறேன் மூலம் சிலிண்டரை தூக்கி கீழே இறக்க வேண்டும். இப்படி மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இந்த அதி அழுத்த சக்தியால் மண்ணின் கீழ் பரப்பில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மண்ணுக்கு அடியில் உள்ள நீரே கட்டிடங்கள் பலவீனம் அடைய காரணம்.
அதிக அழுத்தத்தின் காரணமாக நன்றாக இறுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டினால் அந்த மண் 300 டன் எடை கொண்ட வீட்டையும் தங்கும் வலிமையை பெற்று விடும். இனி அஸ்திவாரத்திர்கென்று அதிக அளவில் செலவு செய்யும் அவசியம் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment