வளர்ந்த நாட்டின் மக்கள்தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் மக்கள் எல்லாம் வளரும் நாடுகளில் தான் வாழ்கிறார்களாம்.
மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளாக இந்தோனேசியா, இந்தியா, மெக்சிகோ நாடுகள் உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போஸ் என்ற ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. மக்கள் மகிழ்ச்சியாக எந்த நாட்டில் வாழ்கிறார்கள் எனபது தான் இவர்களின் ஆயுவு.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 18 ஆயிரத்து 687 பேரிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 51 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கடுத்ததாக இந்தியா மற்றும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த மக்களின் 43 சதவீதம் பேர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்தை இந்தோனேசியாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மெக்சிகோவும் உள்ளன.மூன்றாவது இடத்தை பிரேசில் மற்றும் துருக்கி நாடுகள் பகிர்ந்து கொண்டன. இந்த நாடுகளில் 3௦ சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 22 சதவீதம் மக்கள் மட்டுமே தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். மிக குறைந்த அளவாக அங்கேரியை சேர்ந்த 6 சதவீதம் பேரும், தென்கொரியாவை சேர்ந்த 7 சதவீதம் பேரும், ரஷ்யாவை சேர்ந்த 8 சதவீதம் பேரும், மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.
ஒட்டுமொத்த அளவில் 35 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது, இந்த ஆய்வு.
No comments:
Post a Comment