Sunday, 9 August 2015

அதிசய பூமி


மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற அதிசயக் கிராமம் உள்ளது. இந்தியாவில் எந்த ஒரு கிராமமும் லோனார் கிராமத்தைப் போன்ற அமைப்பில் இருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம்.

5௦ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இப்பகுதியில் 5௦ முதல் 6௦ கிலோமீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் உடைந்து சிதறி விழுந்ததில் இங்கே ஒஉர் பெரிய பள்ளம் எற்படுள்ளது. விண்கல் தாக்கியதால் ஏற்பட்ட இந்தப் பள்ளத்தின் விட்டம் ஆயிரத்து 800 மீட்டர், ஆழம் 17௦ மீட்டர். தவிர இந்தக் கள் விழுந்துள்ளதால், பள்ளம் உள்ள இடம் மற்ற இடங்களை விட 2௦ மீட்டர் உயரமாக இருக்கிறது. இந்தப் பள்ளத்தைச் சுற்றி அடர்ந்த காடுகளும் உள்ளன. ஓர் ஏரியும் இருக்கிறது. இப்படியொரு அதிசய பூமி இருப்பதை 1823-ம் ஆண்டு அலெக்சாண்டர் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்தான் கண்டுபிடித்தார்.

விண்கல் உருவாக்கிய இந்த இடத்தின் மேற்குத் திசையில் சுவர் போன்ற நீண்ட பகுதிகளும் காணப்படுகின்றன. கிழக்குத் திசை ஏரியை நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பழத் தோட்டங்களும், பண்ணைகளும் உள்ளன.

மேலும் சிதைந்த கோவில் சிற்பங்கள் மண்ணில் புதைந்த நிலையில் தென்படுகின்றன. இதனால் விண்கல் உருவாக்கிய இடத்தல் மக்கள் கடவுகளின் சிற்பங்களை உருவாக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள ஈறி, பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது. பொதுவாக இது போன்ற பெரிய விண்கற்கள் விழும் இடங்களில் காலம்செல்லாச் செல்ல அதன் இயல்புத்தன்மை மாறிவிடும். ஆனால் லோனார் கிராமத்தில் உள்ள விண்கல் ஏற்படுத்திய பகுதி பல ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இங்குள்ள ஏரியின் தண்ணீரில் உப்பும், சுண்ணாம்பும் கலந்துள்ளது. உப்புத் தன்மை 5௦ ஆண்டுகளுக்கு முன் பிருந்ததை விட மூன்று மடங்கு குறைந்திருக்கிறது. அதேசமயம், சுண்ணாம்புத் தன்மை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்த டத்தைப் புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி இந்திய விஞ்ஞானிகள் யுனெஸ்கோ அமைப்பிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment