Saturday, 4 February 2017

ஏ.சி.புல்லட் புரூப்




    பாதுகாப்பு படையினரும், தலைவர்களும் குண்டு துளைக்காத புல்லட் புரூப் உடைகளை அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த உடையில் இருக்கும் மிகப்பெரிய குறை வியர்வைதான். இந்த உடைகள் அதிக புழுக்கத்தையும், வெப்பத்தையும் கொடுப்பவையாக உள்ளன. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் குண்டு துளைக்காத குளுகுளு உடையை தயாரித்து உள்ளது.

    ஏர் கண்டிஷன்ட் புல்லட் புரூப் வெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த ஆடையை அணித்து கொள்பவர்கள் புழுக்கம் இல்லாமல் குளுகுளு தன்மையை அனுபவிக்கலாம். வெயில் வேலை செய்யும் இராணுவத்தினர் இந்த ஏர் கண்டிஷன்ட் புல்லட் புரூப் உடையை பயன்படுத்தி வேலைபர்க்கலாம்

   கூல்பேட் என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆடையை அணியும் நபரின் வியர்வையை இந்த கூல்பேட்டுகள் வெளியேற்றிவிடும். அதனால் அந்த நபரின் உடல் குளுகுளு தன்மையை பெரும்.

   இந்த புதிய ஆடையில் குட்டிவிசிரி ஒன்றும் வைக்கப்பட்டு உள்ளது. அது வெளிக்காற்றை ஆடைக்குள் அனுப்பி மேலும் குளுமையை ஏற்படுத்தும்.நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய வகையில் இந்த ஆடையை தயாரித்து உள்ளனர். இதற்காக பிரத்யேக துணியை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜவுளி நிறுவனம் ஓன்று தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த நவீன புல்லட் புருப் ஆடை முழுக்க முழுக்க பேட்டரிகளால் இயங்கக் கூடியது.

   வெயிலில் 3 முதல் 4 மணி நேரம் வரை இந்த ஆடையை பயன்படுத்தி குளுமையாக இருக்கலாம். பிறகு மீண்டும் ரீ சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆடையை பெருமளவில் தயாரித்து விற்பனை செய்ய யூனியன் சுவிஸ் டெக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து இந்த ஆடைக்கான ஆர்டர்கள் குவியும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment