நேரத்தை கணக்கிட பண்டைக்காலத்தில் சூரிய
கடிகாரத்தை பயன்படுத்தினர். முதலாவது சூரிய கடிகாரம் 3800 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் அமைக்கப்பட்டது.
வெயிலை கொண்டு நேரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு நிலத்தில் ஒரு கம்பை நட்டு அதை
சூட்டிலும் வட்ட வடிவமான டயல் அமைத்து மணிநேரம் குறிக்கப்படுகிறது. வானத்தில்
சூரியனின் நிலைக்கு மாற்றம் நேரும்போது டயலின் மீது படியும் கம்பின் நிழலும்
மாறுகிறது. இந்த நிழலின் நீளத்தை 12 ஆக பிரித்து நேரம் அறியப்பட்டது.
சூரிய கடிகாரத்துக்கு பின் நீர்க் கடிகாரம்
வந்தது. ஒரு பாத்திரத்தில் சிறியதொரு துளையிட்டு அதை நீர்த்தொட்டியில் மிதக்க
விடுவார்கள். துவாரம் வழியாக சிறுக சிறுக நீர் நிரம்பிக் கொண்டே இருக்கும்.
குறிப்பிட்ட நேரமானதும் இந்த பாத்திரம் நீரில் மூழ்கிவிடும். நீர்க்கடிகாரத்தை
இரவிலும் பயன்படுத்தலாம்.
இதன்பின் மனர் கடிகாரம் பழக்கத்துக்கு வந்தது.
ஒரு பாத்திரத்தை மணலால் நிரப்பி அதன் அடியில் துளையிடப்படுகிறது. பிறகு கீழே ஒரு
பாத்திரம் வைக்கப்படும். மேலேயுள்ள பாத்திரத்திலிருந்து கீழே வைத்துள்ள
பாத்திரத்துக்குள் மணல் முழுவதும் விழும் நேரத்தை கொண்டு காலத்தை அளவிடலாம். இம்
மாதிரியான் கடிகாரம் அதிகம் பிரபலமாகவில்லை.
சீனர்கள் காலக்கனக்கேடுப்புக்கு புது உத்தியை
கையாண்டனர். அவர்கள் கயிற்ர்ரை நனைத்து அதில் சமமான இடையிளியில் முடிச்சுகள்
போட்டு கயிற்றின் ஒரு பக்கத்தில் தீயை பட்ட வைத்தனர். கயிறு சிறுக சிறுக
எரியும்போது ஒவ்வொரு முடிச்சையும் நேரத்தின் ஒன்றியமாக கணக்கிட்டனர்.
1870-ல் இங்கிலாந்தை ஆண்ட ஆல்பிரட் என்ற அரசர் மெழுகுவர்த்தியை
கடிகாரமாக பயன்படுத்தினர். எரியும் நேரத்திற்கேற்ப நீல வாட்டாக குறிகள் இட்டுநேரம்
அறிய அதனை பயன்படுத்தினார். பண்டைக்கால சீனர்கள் உள்ளுக்குள்ளே
இயந்திரப்பகுதிகளால் இயங்கும் கடிகாரத்தை பயன்படுத்தினர். ஐரோப்பாவில் இவை 13ம் நீற்றண்டில்தான் வழக்கத்துக்கு வந்தது.
1657-58ல் ஹைகூன் என்பவர் பெண்டுலத்தின் தத்துவத்தை
கண்டுபிடித்தார். அதன்பின்னர்தான் கடிகாரத்தில் ஹெயர்ஸ்பிரிங் மற்றும் பாலன்ஸ்
வில் பொருத்தப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டு செல்லக்கூடிய
கடிகாரம் உருவாயிற்று. இம் மாதிரி கடிகாரங்கள் இப்போதும் உள்ளன.
18ம் நூற்றாண்டில் கடிகாரத்தாலும் ரத்தினக்கற்கள்
ப்ருத்தப்பட்டன. இப்போது மின்சாரத்தாலும் அனுசக்தியாலும்இயங்கும் கடிகாரங்கள்
உள்ளன. அணுசக்தி கடிகாரம் துல்லியமாக நேரத்தை காட்டும். இதில் 3 லட்சமாண்டுகளில்
வேண்டுமானால் ஒரு விநாடி காலம் தவறலாம்.
No comments:
Post a Comment