Saturday, 11 March 2017

பிரகாசமான நட்சத்திரங்கள்



    இரவு வானில் சில நட்சத்திரங்கள் மட்டும் மற்றவைகளைவிட பிரகாசமாகத் தெரியும். இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா?

    நட்சத்திரங்களின் பிரகாசமும் நிறமும் அவற்றின் வெப்ப நிலையை பொறுத்து மாறுகின்றன. வெப்பம் அதிகமாக அதிகமாக பிரகாசமாகத் தெரியும். இதற்கு சிறிய உதாரணமும் உண்டு. குளிர்ச்சியான ஒரு எக்கு இரும்புத் துண்டு பார்வைக்கு கருப்பாகத் தெரியும். ஆனால் அதைச் சூடுபடுத்திய பின் அது சிவப்பு நிறமாக மாறுகிறது. அதை மேலும் வெப்பப் படுத்தினால் சிவப்பு நிறம் முதலில் மஞ்சளாக மாறி பிறகு வெண்மையாக மாறும். அதற்கு மேலும் வெப்பம் ஏற்றினால் நீல நிறமாகும். இதிலிருந்து ஒரு பொருளின் நிறம் அதன் வெப்பநிலையைப் பொறுத்து இருக்கிறது என்று தெரிய வருகிறது. ஒரு பொருளைத் தொடர்ந்து உஷ்ணப் படுத்திக் கொண்டே போனால் அது முறையே சிவப்பு, மஞ்சள், பச்சை, வெளுப்பு, நீளம் என பல நிறங்களாக மாறுகிறது.

    ஒரு நட்சத்திரத்தின் நிறத்துக்கும் அதன் வெப்ப அளவுக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் அதன் பிரகாசத்தை உறுதிப்படுத்த இயலும், சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறம் கொண்ட நட்சத்திரங்கள். மஞ்சள் அல்லது பச்சை நிறம் கொண்ட நட்சத்திரங்களை விட வெண்மை நிறம் கொண்ட நட்சத்திரங்கள் அதிக வெப்பமுடையவை. நீல நிறமுடைய நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் விட மிக அதிக வெப்பமாக இருக்கும்.

    நீல நிறமுடைய நட்சத்திரங்களின் மேற்பரப்பு வெப்பநிலை 27,750 டிகிரி செண்டிகிறேடுக்கு மேல் இருக்கும். சூரியன் மஞ்சள் நிறமுடைய ஒரு நட்சத்திரம். ஆகவே அது நீல நிறமுடைய நட்சத்திரத்தை விட வெப்பம் குறைந்ததாக உள்ளது. சூரியனின் மேற்பரப்பு வப்ப நிலை கிட்டத்தட்ட 6 ஆயிரம் டிகிரி சென்டிகிரேட். சிவப்பாகத் தோன்றும் நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பம் 1,650 டிகிரி செண்டிகிரேடை விட குறைவாக இருக்கும்.

    நட்சத்திரங்களின் பிரகாசம் அதன் மேற்பரப்பு வெப்பத்தை பொறுத்து இருக்கிறது. தூரம் அதிகமாக அதிகமாக பிரகாசம் குறைகிறது. இதனால் தான், பூமிக்கு தொலைவில் உள்ள அதிக வெப்பநிலை கொண்ட நட்சத்திரங்களை விட பூமிக்கு அருகில் உள்ள குறைந்த வெப்பநிலை உடைய நட்சத்திரங்கள் பிரகாசமாகத் தெரிகின்றன.

No comments:

Post a Comment