பெண்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், மார்பகப் புற்றுநோய் ஆகிய அபாயங்களை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோனை அவர்களின் ரத்தத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். ரத்தத்தில் இந்த ஹார்மோனை கொண்ட பெண்களுக்கு மேற்கண்ட அபாயம் அதிகம்.
ஸ்வீடனில் லண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போதுதான், ரத்தத்தில் காணப்படக்கூடிய 'நியுரோடேன்சின்'-க்கும் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய், கார்டியோ வாச்குளார் நோய் மற்றும் மார்பகப் புற்றுநோயக்கும் உறுதியான தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
குடல், மூளை இரண்டிலும் உற்பத்தியாகும் நியுரோடேன்சின் ஹார்மோன், ரத்தத்தில் சுற்றி வருகிறது. மகளிர் நோயிகளைப் பொறுத்தவரை இந்தக் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. தற்போது குறிப்பிட்ட ஹார்மோனுக்கும், நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்திருக்கிற விஞ்ஞானிகள், அடுத்து, அந்த நோய்களை எவ்வாறு தடுப்பது என்று மூளையைக் கசக்கி வருகிறார்கள்.
No comments:
Post a Comment