Monday, 8 May 2017

இனி ஒரு நாளைக்கு 25 மணிநேரம். எப்பொழுது ?


   உலக உருண்டையின் சுழற்சியில்தான் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இயங்கி கொண்டு இருக்கிறது. உலகபுகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் நம்ம உலக உருண்டையின் சுழற்சி குறைந்து கொண்டே வருகிறது என்று அதிர்ச்சி தகவலும் வெளியிட்டு உள்ளனர். நம்முடைய உலக உருண்டையின் சுழற்சியின் வேகம் 1௦௦ வருடங்களுக்கு சுமார் 17 மில்லி செகண்ட் குறைகிறது என்று இதை பற்றிய ஆராய்சியின் முடிவுகள் தெரிவிக்கிறது.
   இதனால் ஒரு நாளோட மணி நேரங்கள் அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இதைபற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. காரணம், இப்போ 24 மணிநேரமாக இருக்கும் ஒரு நாளுடைய நேரம் 25 மணிநேரமாக மாறுவதற்கு இன்னும் 140 மில்லியன் வருடங்கள் ஆகுமாம்.
   நம்ம உலக உருண்டை தானாகவே உருவாக்கிக் கொண்ட காந்த சக்தி. நம்ம கிரகத்தின் மையபகுதி நிக்கோல், மற்றும் ஐயர்ன்-னால் நிரப்பப்பட்டது. இதனால் ஒரு காந்த திடலை உருவாகுகிறது. உலகம் சுழன்று கொண்டு இருப்பதாலும், இதன் மையபகுதி பிரியாமல் ஒட்டிக்கொண்டு இருப்பதாலும், இதில் ஏற்படும் காந்த சக்தி, நமது கிரகத்தை சூரிய மண்டல புயல்கள் மற்றும் மற்ற சூரிய மண்டல தாக்குதல்களில் இருந்தும் முழுமையாக பாதுகாத்து வருகிறது. இதனால், பூமியின் சுழற்சியின் வேகம் குறைந்தால் பூமியின் காந்த சக்தியும் குறைய வாய்ப்பு உள்ளது.
   நாம் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்துகொண்டோ, படுத்துகொண்டோ இருக்கும் இந்த தருணத்தில் நம்முடைய உலகம் ஒரு மணி நேரத்திருக்கு சுமார் 1௦௦௦ மைல்கல் சுழன்று கொண்டு இருக்கிறது. இது ஒரே நேரத்தில் சுழன்று கொண்டும், சூரியனை சுற்றி கொண்டும் வருகிறது. நம்முடைய கிரகம் ஒருமணி நேரத்திருக்கு 67,௦௦௦ மைல்கல் சூரியனை சுற்றி வருகிறது. இதையெல்லாம் ஏன் நாம் உணரவில்லை என்றால், இதன் வேகம் ஒரே நிலையில் இருப்பதால் தான்.
   இது வேகத்தை கூட்டி குறைக்காமல் இருப்பதால், இதன் இயக்கத்தை நம்மால் உணரமுடியவில்லை. உதாரணத்திற்கு பள்ளம் மேடு இல்லாத ஒரு ரோட்டில் காரினுள் அமர்ந்து பயணித்தால், வேகத்தையோ அல்லது அதிர்வையோ நம்மால் உணரமுடியாது. அதேபோல் தான் நம் கிரகத்தின் கோட்பாடும் கூட.

No comments:

Post a Comment