Thursday, 18 May 2017

ரத்த தட்டுபாடில் இந்தியா


   ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், தலசீமியா நோய் உள்ளவர்களும், அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்களும் உயிர்பிழைக்க பல யூனிட் ரத்தம் தேவை. ஆனால் ரத்த வங்கிகளில் நிலவும் தட்டுப்பாடு அபாய நிலையைத் தொட்டுள்ளது.

ரத்த இருப்புக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகமாகியுள்ளது. இந்தியாவின் தேவை ஆண்டுக்கு 5௦ லட்சம் யுனிட்டுகளாகும். ஆனால் ரத்த கையிளிருப்போ 35 லட்சம் யுனிட்டுகளே உள்ளன.

கடும் போட்டியை சமாளிக்க தனியார் ரத்த வங்கிகள் நாடு முழுவதும் சட்டவிரோத ரத்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. ஏழை மக்களை பிடித்து ரத்தத்தை உறிஞ்சும் வேளைகளில் ஈடுபட்டுள்ளது. காசி, ஜம்மு, பாட்னா, ஜெய்ப்பூர், கோரக்பூர், அமிர்தசரஸ் போன்ற ஊர்களில் சமீபத்தில் நடந்த சோதனையில் ரத்த மாபியாக்கள் வலைபின்னல் கண்டுபிடிக்கப்பட்டது.

ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று ரத்தம் எடுக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. அவர்களின் ரத்தம் வேதிப் பொருட்களுடன் கலக்கப்பட்டு பனிக்கட்டியில் வைக்கப்பட்ட பிரஷர் குக்கர்களில் சேமிக்கப்பட்டுள்ளது. இப்படி பெறப்படும் ரத்தம் சரியாக பரிசோதிக்கப்படுவது இல்லை. ஒரு யூனிட் ரத்தம் 5௦௦ ரூபாய் முதல் 15௦௦ ரூபாய் வரை விற்கப்படுகிறது.

குஜராத் மருத்துவமனையில் தளசீமியாவால் பாதிக்கப்பட்ட 27  குழந்தைகளிடம் எச். ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டது. ரத்தப் பரிமாற்றம் செய்யும் போதுஏற்பட்ட இந்த கொடுமை நாட்டையே உலுக்கியது. வெளியுலகுக்கு தெரிய வந்த சம்பவங்கள் எல்லாமே நகர்ப்புறங்களில் நடந்தவை. கிராமப்புறங்களில் உறவினர்களின் ரத்தம் எடுக்கப்பட்டு நேரடியாக நோயாளிக்குச் செலுத்தப்படுகிறது. இதை முறைப்படுத்தினால் தான். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக முடியும்.

No comments:

Post a Comment