இந்த நிமிடம் வரை அமெரிக்காதான் உலகின் ஒரே வல்லரசு. ஆனால் அந்த நாட்டின் சாம்ரஜ்யவாதம், ஏகாதிபத்தியம், மேலாதிக்கம் போன்றவை முன் எப்போதையும் விட இப்போது அதிகமாக கேள்விக்குள்ளகிறது. சொவியத்யுநியனின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காதான் உலகின் ஒரே வல்லரசாக மாறி இருந்தது. அமெரிக்காவை மையப்படுத்தி தான் அனைத்து நாடுகளின் வெளியுறவு கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அமெரிக்காவை பகைத்துக் கொள்ளும் தைரியம் யாருக்கும் இல்லை. மீறி பகைத்துக் கொண்ட ஈராக், ஈரான், வெனிசுல போன்ற நாடுகள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருந்தது.
ஆனால் 2000-ம் ஆண்டுகளில் தொடக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சீனா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, போன்ற நாடுகள், பொருளாதார முனேற்றத்தின் காரணமாக சிறு வல்லரசுகளாக உருவாகத் தொடங்கின. உண்மையில் அமெரிக்க பொருளாதாரத்துடன் மிக நெருக்காமான உறவு இருந்ததால்தான் இந்த மாற்றம் சாத்தியமானது. அதன் பெரும்பங்கு உலக மயமாக்களையே சேரும்.
உலக மயமாதல் தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட சீனா, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் வெகுவேகமாக பொருளாதார முன்னேற்றத்தை அடைந்ததன் மூலம் தங்களின் சொந்த ராஜதந்திர பலத்தையும் மேம்படுத்திக் கொண்டன தொடக்கத்தில் தடுமாறிய ரஷியா, ஆர்ப்பாட்டம் இன்றி முன்னேறி வந்த பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் கூட அந்தந்த பகுதிகளில் முக்கிய பொருளாதார சக்திகளாக மாறின.
அதிலும் குறிப்பாக பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளை தனிப்பாட்ட முறையில் புதிய பொருளாதார சக்திகளாக உலக பொருளாதார நிபுணர்கள் இனம் கண்டார்கள். இந்த நான்கு நாடுகளின் முதல் எழுத்துக்களை கொண்ட பி.ஆர்.ஐ.சி. (பிரிக்-BRIC) என்ற பெயர் நிதிச் சந்தையில் புதிய வல்லரசுகளின் பெயராக அழைக்கப்பட்டது. இந்த பெயருக்குள் வராவிட்டாலும் இந்தோனேசிய, துருக்கி, வெனிசுலா போன்ற நாடுகளும் கூட வருங்கால புதிய வல்லரசுகள் தான்.
இங்கே வல்லரசு என்று குறிப்பிடப்படுவது வழக்கமான வல்லரசு என்ற சொல்லின் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. பொருளாதார பலம் என்ற அடிப்படையில் சொல்லப்படுகிறது. இவற்றறை அமெரிக்காவுக்கு சமமான வல்லரசு என்று சொல்ல முடியாது. இருந்தாலும் அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு வேகமாக வளர்ந்து வரும் புதிய வல்லரசுகள் என்று சொல்லலாம். ஆனால் அமெரிக்காவைக் ஏகாதிபத்தியம் என்று அடையாளப்படுத்துவது போல் இந்த புதிய வல்லரசு நாடுகளை அடையாளபடுத்த முடியாது.
ஏனென்றால் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத்யூனியன் போன்ற முந்தைய ஏகாதிபத்திய நாடுகளைப்போல் காலனி அமைப்பையோ, அல்லது ராணுவ பலத்தையோ தங்களின் வலிமையாக இவர்கள் நிறுத்தவில்லை. பொருளாதாரம், உற்பத்தி, வணிகம், உள்நாட்டு நுகர்வு போன்ற அம்சங்களால் மட்டுமே இவை நிலையான, பலமான, புறக்கணிக்க முடியாத வல்லமையுள்ள அரசுகளாக மாறியுள்ளன. இதற்கு முன்பு வலுவான நாடுகளாக இருந்த ஜப்பான், ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எப்போதும் போல வல்லமை பொருந்திய நாடுகளாகவே தொடர்கின்றன.
No comments:
Post a Comment