Sunday, 9 July 2017

மனிதர்களுக்கும் கொரில்லாவுக்கும் உள்ள ஒற்றுமை

 
மனிதர்களுடன் ஒத்து  போகும் குணாதிசயங்களும் மற்றும் மனிதனை போன்று தோற்றத்தை கொண்ட விலங்கு தான் கொரில்லாக்கள். மனிதர்களின் மூதாதையர்கள் என்று படிக்கும் போதெல்லாம் கொரில்லாக்கள் நம் கண் முன்னே தோன்றி மறைகின்றன. அப்படிப்பட்ட கொரில்லாக்களுக்கும் மனிதர்களுக்கும் சில வியக்க வைக்கும் ஒற்றுமைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
மனிதர்களுக்கும் கொரில்லாவுக்கும் உள்ள ஆச்சரியமான ஒற்றுமை 
கொரில்லாக்கள் 98.6 சதவீதம் மனிதர்களுக்கு ஒப்பானவை. மனிதர்கள் மற்றும் கொரில்லாக்கள் வியக்கத்தக்க வகையில் ஒரே மரபணு கோட்பாட்டை கொண்டவர்கள். மனிதகர்களை போலவே கொரில்லாக்களும் குடும்பங்களை பராமரிக்கின்றன. சராசரியாக 10 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கொரில்லா குடும்பத்தில் பெண்கள் குழந்தைகள் மற்றும் ஓன்று அல்லது இரண்டு ஆண் கொரில்லாக்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பிணைந்து இருக்கும் இவைகள் பெரும்பாலான நேரங்களில் ஒன்றாக சாப்பிடுவது, விளையாடுவது, ஓய்வெடுப்பது மற்றும் தூங்குவது உள்ளிட்ட செயல்களில் இணைந்தே இருக்கும். மனிதர்கள் அவ்வப்போது ஒரு வினோத வாசனையை வெளிப்படுத்துகின்றனர். மேலும் தங்களது இருப்பை மற்றும் உணர்வுகளை குறிக்கும் வகையில் வாசனை திரவியங்களை உபயோகப்படுத்துகின்றனர். அதே போல குடும்ப தலைவராக இருக்கும் ஆண் கொரில்லாக்கள் தங்களது உற்சாக தருணங்களில் கடுமையான உடல் துர்நாற்றத்தை வெளிப்படுத்தி, தங்களின் இருப்பிடத்தை மற்ற கொரில்லாவுக்கு வெளிப்படுத்துகின்றன.
 
கொரில்லாவின் வாசனை நுகரும் திறன், பார்வை திறன் ஆகியவை, மனிதர்களை ஒத்திருக்கிறது. எனினும் மனிதர்களை போல் கொரில்லாக்கள் அசைவம் உண்பதில்லை, அவைகள் சுத்த சைவம் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் கைகளைப் போன்றே கொரில்லாக்களின் கைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாக உள்ளது. கட்டை விறல் உள்பட  5 விறல் கொண்ட கொரில்லாக்களின் கைகளில் உள்ள ரேகைகளும் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. கொரில்லாவுக்கு நிமோனியா, சைனஸ் போன்ற மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களும் ஏற்படுகின்றன. 1988 ம் ஆண்டு ரூகோண்டாவில் முதன்முதலாக நிமோனியாவாள் பாதிக்கப்படுவத்தை கண்டறிந்துள்ளனர். உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பிறருடன் தொடர்பு கொள்ள மனிதர்களை போல ஒலிகளை எழுப்புகின்றன. கொரில்லாக்களால் அலறவும், அளவும், சிரிக்கவும் முடியும்.
 
அடர்ந்த காடுகளில் தமது இருப்பிடத்தை மற்ற கொரிலாவுக்கு தெரிவிக்க வினோத ஒலிகளை எழுப்புகின்றன. மனித இனத்தின் ஒரு பெண்ணின் கற்பகாலமானது, 9 மாதங்கள் நீடிக்கிறது. அதேபோல ஒரு பெண் கொரில்லாவின் கற்பகாலமானது 8.5 மாதங்களாக உள்ளது. மேலும் ஈன்ற குட்டிக்கு தாய் பால் கொடுக்கிறது. மேலும், குட்டியின் கவனத்தை ஈர்க்க தனது கைகளை தட்டுகிறது. இந்த குழந்தை வளர்க்கும் நுட்பத்தை பெரும்பாலான தாய்மார்கள் செய்வதை பலரும் பார்த்திருக்க கூடும். கொரில்லாக்களால் மனிதர்களை போலவே கைகளை ஊன்றாமல் நடக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்க அவைகள் விரும்புவது இல்லை. மேலும் கொரில்லாக்களுக்கு கோபம் வந்தால் கைகளை தூக்கிக்கொண்டு நெஞ்சில் அடித்து சத்தம்  இடும். கொரில்லாக்கள் மதியம்  மற்றும் இரவில் சில மணி நேரம் தூங்கும் இயல்பு  உடையதாக உள்ளது. தூங்குவதற்கு வசதியாக சிறிய மரங்களில் படுக்கை மெத்தைகள் போல் தாயார் செய்து. அதன் மீது படுத்து தூங்கும்.

No comments:

Post a Comment