Sunday, 6 August 2017

இன்னும் படிக்காமல் இருக்கும் 3 லட்சம் ஓலை சுவடிகள்


     தமிழ்மொழி நல்ல இலக்கிய வளம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். நமக்கு தெரிந்த இலக்கியம் கொஞ்சம் தான். ஆனால் நமக்கு தெரியாத இலக்கியங்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

     தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் சரஸ்வதி மகால் நூலகம் உருவாக்கப்பட்டது. இது உலகின் முக்கயமான நூலகங்களில் ஒன்றாக திகல்கிறது. இங்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள், தஞ்சை ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் என பல அபூர்வமான விஷயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 1627ல் அச்சிடப்பட்ட பழமையான அச்சுப்புத்தகமும் இங்கு பாதுகாப்பாக உள்ளது. 

     தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளில் இதுவரை 50 மட்டும்தான் படித்து வெளிவந்துள்ளன. அந்த 50 நூல்களுக்குள் தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநாறு, பதிற்றுப்பத்து, எட்டுத்தொகை, நற்றிணை, குறுந்தொகை, இங்குருநூறு, சீவகசிந்தாமணி, பரிபாடல் போன்றவை உள்ளன.

     இவற்றில் இருக்கும் இலக்கியங்களின் செழுமையும், தொன்மையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது. அப்படியிருக்கும் போது இங்கு குவிந்துகிடக்கும் மூன்றுலட்சம் ஓலைச்சுவடிகளையும் படித்தறிந்தால் எத்தனை தரமான படைப்புகள் வெளி வரும் தமிழ்மொழியின் செழுமையும், தமிழனின் பல்வேறு திறமைகளையும் பற்றி உலகம் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளும்.
     உலகில் தோன்றிய முதல் மொழி, மூத்த மொழி தமிழ்மொழி என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலைச்சுவடிகளே போதுமே. இப்படி படிக்காமல் இருக்கும் தமிழ்பொக்கிஷங்களை ஆய்வு செய்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை தமிழ் அறிஞர்களுக்கு இருக்கிறது. தமிழின் மேன்மையை மேலும் உணரவைப்பார்களா? பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment