கிறிஸ்து பிறப்பதற்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பே குமாரி கண்டம் இருந்தது என்றும், அந்தக் குமரி கண்டத்தை பாண்டிய மன்னன் ஆண்டான் என்றும் சங்ககால இலக்கியங்கள் வழியாக நாம் அறிந்த தகவல்களை எடுத்துரைத்த போது பலரும் அதை உதாசினப்படுத்தினர். ஆனால் என்றோ குமாரி கண்டம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் கீழடியில் கிடைத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த குமாரி கண்டத்தின் தலைநகரமான தென்மதுரையே இந்த கீழடித்தான் என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மதுரை காஞ்சி போன்ற குறிப்புகளில் இருந்து தற்போதைய மதுரை உண்மையில் குமரிக்கண்டத்தின் தலைநகரம் எல்லை என்பதை நாம் அறியமுடிகிறது.
இலக்கியங்களில் உள்ள குறிப்புப்படி திருப்பரங்குன்றம் மலைக்கு நேர் எதிராக மதுரை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இப்போது நாம் கீழடி என்று அலைக்கும் அந்த பகுதி சரியாக திருப்பரங்குன்றம் மலைக்கு நேர் கிழக்கில் உள்ளது. அப்படியானால் இது தானே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தென்மதுரை. இத்தகைய தொன்மை நகரமான கீழடியில் இது வரை கிட்டத்தட்ட 5,000 க்கும் மேற்பட்ட சங்க கால பொருட்கள் கிடைத்துள்ளன. பெரிய பானை முதல் சிறிய முத்துக்கள் என அனைத்து பொருட்களிலும் அவ்வளவு நேர்த்தியும் தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது. யானை தந்தங்களில் தலை வாரும் சீப்பு செய்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என்று நாமே யூகித்துக்கொள்ள முடியும்.
சங்கத் தமிழன் பல நாடுகளிலும் வணிக ரீதியாக தொடர்பு வைத்திருந்தான் என்ற ஆதாரமும் இங்கு கிடைத்துள்ளது. பானை ஓடுகளில் பிராகித்த சொற்கள், யானைத் தந்தங்களில் தாயக் கட்டை, என பல பொருட்கள் இங்கு கிடைத்தாலும், அனைத்தும் பத்தாம் நூற்றாண்டை தாண்டியதாக இல்லை. இதனால் இந்த நகரம் 10 ம் நூற்றாண்டோடு அழிந்து போயிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அதே சமயம் தற்போது உள்ள மதுரையோ 10 ம் நூற்றாண்டில் உருவானது தான் என்று ஆய்வாளர்கள் பல கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் பல வருடங்களாக கூறி வருகின்றனர். இதனால் 10 நூற்றாண்டில் குமாரி கண்டத்தின் தலைநகரான பழைய தென்மதுரை அழிந்து போனதால் புதிய மதுரைக்கு மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
இத்தனை சிறப்பு மிக்க கீழடியை ஒரு வரலாற்று பொக்கிஷமாக கருத வேண்டாமா இந்த அரசு. ஆனால் உண்மையில் அங்கு நடப்பது என்ன அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டு. முன் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை எல்லாம் சரியான பராமரிப்பு கூட இல்லாமல் உள்ளது. அங்கு மேலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தாள் இந்திய வரலாறே மாற்றி எழுதபடும் என்ற அச்சத்தில், அத்தனையும் நிறுத்திவிட்டு தமிழனின் வரலாற்றை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. இத்தகைய சூழ்நிலையில் இனியாவது விழித்துக் கொள்வானா தமிழன் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment