கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் நடந்த சக்தி வாய்ந்த சுனாமியின் காரணமாக பல ஆயிரம் மக்கள் இறந்தார்கள் மற்றும் பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் சேதம் அடைந்தது. இதை விட மிகவும் ஆபத்தான சம்பவமும் ஓன்று நடந்துள்ளது. அதுதான், FUKUSHIMA வில் இயங்கி வந்த அணுஉலையில் ஏற்பட்ட கசிவு.
இது எந்த அளவுக்கு ஆபத்தாக அமைந்து இருந்தது என்று பார்த்தால், சுனாமியால் பாதிப்பு அடைந்திருந்த அந்த அணுஉலையை நெருங்க கூட முடியாத அளவுக்கு வெப்பமும், கதிர்வீச்சும் இருந்துள்ளது. கடின முயற்சிக்கு பின் குறிப்பிட்ட அளவுக்கு கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்தினர். கிட்டத்தட்ட 6 வருடங்கள் கடந்த நிலையிலும். அந்த பகுதியில் இருந்து வெளிப்படுகிற கதிர்வீச்சு அளவு அதிக அளவு இருப்பதால், இன்று வரை அந்த பகுதிக்கு யாரையும் அனுமதிக்கபடவில்லை. இந்த கதிர்வீச்சினால் உடனடியாக பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், கடந்த இரண்டு வருடங்களால் கேன்சர் போன்ற நோய்களால், வழக்கத்தை விட மிக அதிக அளவிலான நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஒரு சர்வே உறுதி படுத்திருக்கு.
FUGUSHIMA அணுஉலை பாதிக்கப்பட்டதிலிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு கடலில் கலப்பதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பல ஆராச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனாலும் இது உண்மையா என்று தெரியாமல் இருந்த நிலையில், அமெரிக்காவின் கடல் பகுதியில் சமீபகாலமாக அளவுக்கு அதிகமான கதிர்வீச்சின் அளவை பதிவு செய்துள்ளனர். இந்த பதிவை முன்னிலை படுத்தி FUKUSHIMA அணுஉலையிலிருந்து இப்பொழுது வரைக்கும் அளவுக்கு அதிகமான கதிர் வீச்சு வெளியாகிறது என்றும். ஒவ்வொரு நாளும் 300 டன் அளவிலான கடல் நீர், கதிர்வீச்சினால் பாதிப்படையலாம் எனவும் ஒரு அதிர்ச்சியான தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இது மட்டும் அல்லாமல், இந்த நிலை ஒரு தொடக்கம் தான் எனவும், இதைவிட அதிகமான சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன்னாள், ஜப்பானில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த FUKUSHIMA அணுஉலையில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை காரணம் காட்டி, ஒலிம்பிக் போட்டியை ஜப்பானில் நடத்த அனுமதிக்க கூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். பின்னர், வெகு விரைவில் இந்த நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று ஜப்பான் நாட்டு அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. ஆனால் இப்பொழுது நடத்தப்பட்ட சர்வே மூலம், ஜப்பான் நாட்டு கடல் பகுதியில் மட்டும் இல்லாமல் அமெரிக்காவின் கடல் பகுதிகளிலும், கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்து உள்ளது.
No comments:
Post a Comment