ஆசியாவின் மிகப்பெரிய ஒரு MAFIYA குழு எது என்று அது
TRIADS மட்டும் தான். சீனாவில் 1600ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமைப்பு.
இப்பொழுது மிகப்பெரிய MAFIYA வாக இருக்கும் இந்த TRIADS, ஒரு காலத்தில் சீனாவில்
17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னரின் பாதுகாப்புகாக ஆரம்பிக்கப்பட்டது இந்த
அமைப்பு. 1674ம் ஆண்டு சீனாவை ஆட்சி
செய்து கொண்டு இருந்த மிங் டேநேஸ்றி யை வெற்றி கொண்டு சீனாவில் தங்களின் ஆட்சி
முறையை கொண்டு வந்தவர் தான் மஞ்சூரியன் குய்ன் டெண்நெச்ரி.
அந்த காலகட்டத்தில் புதிதாக தோன்றிய குய்ன்
டென்நேச்ரி யை பாதுகாக்க, யுத்த பயிற்சி பெற்ற புத்த துறவிகள் மடம் ஓன்று
உருவாக்கினார். நாளடைவில் இந்த புத்த துறவிகள் அரசாங்கத்தில் பல முக்கிய
பொறுப்புகளை வகிக்க ஆரம்பித்தனர். இதனால் எதிர் காலத்தில் எதாவது பிரச்சனை வரக்
கூடும் என நினைத்த அரசர். புத்த துறவிகளை கொலை செய்ய உத்தரவிடுகிறார். அவருடைய
கட்டளையின் படி துறவிகள் தங்கியிருந்த மடம் தாக்குதலுக்கு உள்ளாயின. இதனால் அங்கு
தங்கி இருந்த பெரும்பாலான துறவிகள் கொல்லப்படுகின்றனர். இருந்தாலும் ஒரு சில
துறவிகள் தப்பித்து வெளியேறுகின்றனர்.
அப்படி தப்பித்து வெளியேறிய துறவிகள், தங்களின்
இந்த நிலைக்கு காரணமான குய்ன் டென்நேச்ரி யை சீனாவில் இருந்து விரட்டி அடித்துவிட்டு.
சீனாவின் ஆட்சிக்கு மீண்டும் மிங் வம்சத்தினரையே கொண்டுவர திட்டம் தீட்டுகின்றனர்.
அதற்காக பல ரகசிய குழுக்கள் உருவாகுகின்றனர். நாளடையில் இந்த ரகசிய குழுக்கள் தான்
TRIADS என அழைக்கபட்டனர். ஆரம்பத்தில் இந்த ரகசிய குழுக்கள் மக்களை பாதுகாக்கவும்,
அவர்களுக்கு நடக்கும் தவறுகளை எதிர்த்து கேட்கவும் செயல்பட்டு வந்தது. ஆனால்
நாளடைவில் இந்த குழுக்கள் குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கின.
17ம் நூற்றாண்டில் தொடங்கி 2௦ம் நூற்றாண்டு
முற்பகுதி வரை சீனாவை ஆட்சி செய்து வந்த குய்ன் டென்நேச்ரிக்கு எதிராக பல
கலவரங்களை தூண்டி விட்டனர் இந்த TRAIDS அமைப்பினர். ஒரு வழியாக 1911ம் ஆண்டு குய்ன் டென்நேச்ரியை சீனாவில் இருந்து
அகற்றப்பட்டது. ஆனால், அந்த வேளையில் மிங் வம்சத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிருடன்
இல்லாத காரணத்தால் இந்த TRAIDS அமைப்பே தொடர்ந்து ஆதிக்கம் நடத்த ஆரம்பித்தது.
இப்படி சென்றுகொண்டிருந்த நிலையில் 1950களில் கம்யூனிஸ்ட் தலைவரான மா சே துன் சீனாவை கை
பற்றினார். இதன் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறிய TRAIDS ஹாங்காங், சிங்கப்பூர்
போன்ற நாடுகளில் செயல்பட தொடங்கின. இப்படி நடந்த காலகட்டத்திலேயே TRAIDS அமைப்பு,
தோராயமாக 3 லட்சம் உறுபினர்களை கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சீனாவில்
இருந்து வெளியேறியதாக நம்பப்பட்ட TRAIDS மறைமுகமாக சீனா, ஹாங்காங், சிங்கபூர்
போன்ற நாடுகளில் வேகமாக வளர தொடங்கின.
ஆள்கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற பல குற்ற
நடவடிக்கைகளில் இடுபட்ட TRAIDS போதை பொருள் விநியோகத்தில் முக்கிய இடத்தை
பிடித்தனர். தற்போதை கால கட்டத்தில் தோரயமாக 1௦ லட்சம் உறுப்பினர்கள் இருக்கலாம்
என கூறுகின்றனர். TRAIDS இந்த மாபெரும் வளர்ச்சிக்கு, அவர்களின் பண பலம்,
செல்வாக்கு போன்றவற்றை மட்டும் அல்லாமல் மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது
என்னவென்றால் இந்த குழுவின் கட்டுபாடுகள் தான். கட்டுபாட்டை மீறும் உறுப்பினர்களை
கொலை செய்யவும் தயங்குவதில்லை.
மேலும் இந்த TRAIDS அமைப்பு தற்பொழுது
அமெரிக்காவில் அதிக அளவில் பரவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்கள்
மூலம் மட்டும் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக 1 லட்சம் ஆட்கள் வரைக்கும் அழைத்து
வருவதாக ஒரு அதிர்ச்சியான செய்தியும் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment