கல்யாணம் செய்து கொள்ளாமல், ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் உறவை Living Together என்று சொல்வார்கள். இந்த வழக்கம் மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியதாக தமக்கு தெரியும். ஆனால் இந்தியாவில் கடந்த 1000ம் ஆண்டுகளாக இந்த முறையை கடைப்பிடித்து, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து யாரும் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
ராஜஸ்தானில் இருக்கும் கடைசியா எனும் பழங்குடி மக்கள் 1000 ஆண்டுகளாக இந்த வழக்கத்தை நடைமுறையில் கடைப்பிடித்து வருகின்றனர். இதை தங்கள் மூதாதையர்களிடம் இருந்தது கற்று பின்பற்றி வருவதாக கூறுகின்றனர். 70 வயது மூதாட்டி தனது மகன் முன்னாள் தனது Living Together ரை, தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். இது பார்ப்பதற்கு பெரும் ஆச்சரியம் அளிக்கிறது.
கடந்த 1000 வருடங்களாக கடைசியா பண்பாட்டில், அவர்கள் கிராமத்தில் இருந்து யாரை வேண்டும் என்றாலும் தனது துணையாக தேர்வு செய்து கொள்வார்களாம், அதற்கு அந்த பழங்குடி ஒப்புதல் வழங்குகிறது. இவர் இந்த நபரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, எந்த ஒரு நிபந்தனையும் இங்கு இல்லை, ஆனால் போதிய அளவு பணம் இருந்தால் அவர்கள் சேந்து வாழலாம். அதாவது சம்மதத்துடன் அல்ல, கடத்தியும் திருமணம் செய்து கொள்ளலாம். திரும்பி வரும்பொழுது அவர்கள் ஜோடியாகத் தான் வர வேண்டும்.
இந்த கிராமத்தில் திருமணம் செய்து கொள்ளாமலே இருவர் ஒன்றாக வாழலாம். இதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. என்ன நிபந்தனை என்றால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேலை அவர்களால் குழந்தை பெற்று கொள்ளமுடியவில்லை என்றால், அந்த நபர் வேறு துணையை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த கிராமத்தில் மணமகன் வீட்டார் தான் மணமகள் வீட்டாருக்கு சீர்வரிசை, மற்றும் வரதட்சணை கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்துகொண்டு இணைந்தாலும் சரி, திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்தாலும் சரி, மணமகன் வீட்டார் கொடுக்க வேண்டியதை கொடுத்தே ஆகவேண்டும். அதேபோல் மணமகன் வீட்டார் தான் திருமண செலவுகளை மொத்தத்தையும் எடுத்து செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment