உலகின் மிகப்பெரியதும், ஆச்சரியங்களையும் அதே அளவு மர்மங்களையும் கொண்டதுதான் அமேசான் காடுகளும் அதன் வழியே ஓடும் நதிகளும். அமேசான் காடு என்பது தென் அமெரிக்க பகுதியில்
அமைந்துள்ள மிகப்பெரிய காடுகளின் ஒட்டுமொத்த தொகுப்பு. சூரிய ஒளி கூடு
நுழைய முடியாத அடர்ந்த காடுகளையும், நீர் நிலைகளையும் உள்ளடக்கியதுதான்
இந்த அமேசான் காடுகள். எண்ணற்ற செடி கொடிகள், மூலிகை தாவரங்கள் மனிதனால்
இனம் காணப்படாத பல உயிரினங்கள் என தனக்குள் பல பொக்கிஷங்களை ஒழித்து
வைத்துள்ளது இந்த காடு. இவைகள் எல்லாம் உருவாக முக்கிய காரணம் அதன் நடுவே
பல கிளைகளாக பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதிகள் தான்.
பூமியில் உருவாகும் கார்பன்டை ஆக்சைடுகளை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள் தான். இந்த பகுதியானது 3 மில்லியன் பூச்சி இனங்களையும், 10,000 அதிகமான தாவரங்களையும், பல ஆயிரம் விலங்குகளையும் கொண்டு
விளங்குகிறது. உலகில் உள்ள அணைத்து பறவை இனங்களில் 5ல் ஒரு பங்கு இங்கு
தான் வசிக்கின்றன. இந்த நதியில் வாழும் உயிரினங்கள் பெரும்பாலானவை உலகில்
வேறு எந்த பகுதியிலும் காணப்படாதவைகளாகவே அறியப்படுகிறது. இந்த காடுகளில்
விளையும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழ வகைகளில் வெறும் 200 மட்டுமே உலக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. உலகின் மிகவும் பழமையான மலைவாழ் நாகரிகமும், உலகின் மிகவும் மூத்த குடிகளாக கருதப்படும் மாயன் நாகரீகமும் இங்கிருந்தே ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சுமார் 1100 கிளை நதிகளை கொண்டது இந்த அமேசான் காடு. அவற்றில் 17 நதிகள் 1500 K.M நீளம் கொண்டது. உலகின் நைல்
நதிக்கு அடுத்த படியாக மிகப்பெரிய நதியாக விளங்குவது இந்த அமேசான்
காடுகளில் உள்ள நதிகள் தான். உலகின் ஆபத்தான மீன் இனமாக கருதப்படும் பிராண வகை மீன்கள் இந்த நதிகளிலும், அது கலக்கும் அட்லண்டிக் கடலோர பகுதிகளிலும் தான் அதிகமாக வாழ்கின்றன. அனகோண்டா போன்ற
பயங்கரமான பாம்புகளின் பிறப்பிடமும் இதுதான். இதுதவிர இங்கு வாழும் சில
பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள், வெளியுலகத்தை பார்க்காமலேயே இன்னமும்
இயற்கையுடனே இணைந்து வாழ்ந்து வருகின்றனர். காட்டில் கொடிய நோய் பரவினாலும்
அதனை எதிர் கொள்ளும் திறன் அமைப்பை பெற்று வாழ்கிறார்கள் இந்த மக்கள்.
உலகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியதும், பயங்கரமானதும் இரண்டிலுமே இதுதான் முதல் இடம் பெறுகிறது. 8 நாடுகளை எல்லை பகுதிகளாக கொண்டுள்ளது இந்த காடு. மனித இனம் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மொத்த அளவில் 20 சதவீதம் இங்குதான்
உற்பத்தியாகிறது.இவ்வளவு அதிசயம் கொண்ட அமேசான் காடுகளுக்கும், மற்றும்
அதனை சார்ந்துள்ள நதிகளுக்கும் மற்றொரு அம்சமும் இருக்கிறது. அதுதான் பறக்கும் ஆறு என்று
அழைக்கப்படும் ஒட்டு மொத்த அமேசான் பிரதேசத்தையும் மேலிருந்து
சூழ்ந்திருக்கும் நீராவியால் ஆனா ஆறு. அமேசான் ஆற்றின் நீரை உறிஞ்சி
மரங்கள் வெளியேற்றும் நீராவியால் இவை உருவாவதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளில் உருவாகும் பனி பொலிவிற்கும்,
மலை பொலிவிற்கும் இவைகளே ஆதாரமாக விளங்குகின்றன. இந்த பறக்கும் ஆற்றின்
சிறப்பு அம்சம் தரையில் ஓடும் ஆற்றின் நீரோட்டத்தை போலவே இதன் நீராவி
ஓட்டமும் அமைந்திருப்பது தான். மனித இனம் காணாத பல அதிசயங்கள் இதனுள்
ஒளிந்திருக்கின்றன. ஆனால் இந்த காட்டை பற்றி ஆராயபட்டதும்,
கண்டுபிடிக்கப்பட்டதும் 100ல் 50 சதவீதம் கூட இருக்காது என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment