நகரம் முழுவதும் சூதாட்டவிடுதிகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அப்படிப்பட்ட நகரங்களும் உலகில்
இருக்கின்றன.
மெக்காவ் – சீனாவில் உள்ள நகரம் அது. 20 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த நகரில்
வெனிடியம் மெக்காவ் என்ற ஓட்டல் உள்ளது. இங்கு 4 ஆயிரம் சூதாட்ட ‘ஸ்வாட் மெஷின்’ கள் உள்ளன. 800 சீட்டாட்ட டேபிள்கள் பிரமாண்டமாக உள்ளன. உலக
சூதட்டக்காரர்களே ஓன்று கூடுங்கள், என்று மெக்காவ் விடுதிகள் தொடர்ந்து அழைப்பு
விட்டுக் கொண்டே இருப்பதால், இந்த நகரம்தான் இப்போது ஆசியாவின் சூதாட்ட சொர்க்கம்.
இந்த நகரத்தின் மொத்த வருமானத்தில் 75 சதவீதம் சூதாட்டம் மூலமே கிடைக்கின்றது. இதனால்தான்
இங்குள்ள சூதாட்ட கேசினோக்கள் இடைவேளை இல்லாமல் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
இதற்கடுத்து அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள
அட்லாண்டிக் நகரில் 24 மணி நேரமும் சூதாட்டம்தான் சூடு பறக்கிறது. இங்குள்ள
முக்கிய சூதாட்ட ஓட்டலான தாஜ்மகால், நமது இந்திய தாஜ்மகால் போலவே
வடிவமைக்கப்பட்டுள்ளது. காதலுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை இவர்கள் சூதட்டத்துக்காக
வடிவமைத்திருக்கிறார்கள். ஷாஜகான் உயிரோடு இருந்தால் நொந்து போய் இருப்பார்.
ஆஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல
சூதாட்டத்திலும் கில்லாடிகள். ஆஸ்திரேலியாவில் 400க்கும் மேற்பட்ட சூதாட்ட விடுதிகள். உள்ளன. இவை
உலக சூதாட்ட விடுதிகளுக்கே சவால்விடும் அளவுக்கு வசதியானவை. சிட்னியில் உள்ள
‘கிரவுன் கேசினோ’, ‘ஸ்டார் சிட்டி கேசினோ’ இரண்டும் அசத்தலான சூதாட்ட விடுதிகள்.
சூதாட்டம் விளையாடியது போக மிச்சநேரம் இருந்தால்
பஹாமாவில் தீவுகளுக்கு இடையே நீந்தி சென்று இயற்கையை ரசித்துவிட்டு மீண்டும் சூதாடலாம்.
பசுமைத் தீவுகளுக்கு நடுவே நீந்தி நீந்தி சென்று சூதாடி மகிழலாம். இந்த வசதி
பஹாமாஸ் தீவுகளில் உள்ளன.
பணம் இருப்பவர்களின் உலகமே வேறு.
No comments:
Post a Comment