Genetic Memory – ஒருத்தரின் DNA வில் பதிவாகி உள்ள சில நினைவுகளை தான் Genetic Memory என்று கூறுகின்றனர். புரியும்படியாக கூறவேண்டும் என்றால், 7ம்
அறிவு படத்தில் போதி தர்மரின் நினைவுகளை சூரியாவுகுள் கொண்டுவர முயற்சி செய்வாங்க
அல்லவா அதுதான் Genetic Memory. இந்த Genetic
Memoryயை மீண்டும் ஒருவருக்கு செலுத்தி, செயல்பட வைக்க
முடியுமா என்று இப்பொழுது பார்ப்போம்.
Genetic Memory – நம் முன்னோர்களின் நினைவுகள் DNA வில் பதிவாகி அடுத்தடுத்து தலைமுறைக்கு எடுத்து
செல்லபடுவது தான் Genetic Memory. உத்தாரனதிருக்கு சொல்லவேண்டும் என்றால், ஒரு குழந்தை
எழுந்து நடப்பது, பேச ஆரம்பிகிறது மாதிரியான விசயங்களை சொல்லலாம். இப்படி DNAவில் பதிவாகும் நினைவுகளை, அவர்கள் எப்படி
நடந்து கொண்டார்கள், என்ன என்ன விரும்பி சாப்பிடார்கள் என்பது போன்ற நினைவுகள்
பதிவாகாது. பிறகு எந்த மாதிரியான நினைவுகள் பதிவாகும் என்றால்.
அவர்கள் மிகவும் முக்கியம் என்று நினைத்த சில
நினைவுகள் அல்லது உயிருக்கு ஆபத்து என்று பயந்து ஒதுங்கிய விசயங்கள் எல்லாம்
அவர்களின் DNA வில் பதிவாகி, அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடரும். இதற்கு ஒரு
உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஒரு 5௦௦ வருடங்களுக்கு முன்னாள் ஒரு இளைஞன் வாழ்ந்து
வருகிறார். அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது. பின்னர் அவர் பிழைத்து விடுகிறார்.
இப்பொழுது அவருக்குள் பாம்பு என்றால் ஆபத்து, பாம்பை காண்டல் தூரமாக போக வேண்டும் என்ற
நினைவு அவருக்கு பதிவாகும்.
இந்த தகவல் என்ன ஆகும் என்றால், அவருக்கு
பிறக்கும் குழந்தைகளில் ஆரம்பித்து அவருடைய சந்ததிகள் அனைவருக்கும் பாம்பு என்றால்
ஆபத்து என்ற தகவல் பாஸ் ஆகும். இது தான் Genetic Memory. Genetic
Memory என்ற ஒரு விஷயம் 1940ல் இருந்து பேசபட்டாலும், இந்த விஷயத்தை கடந்த பத்து
வருடங்களுக்கு முன்பு தான் அறிவியல் பூர்வமாக என்று கொண்டார்கள் அதற்கு காரணம் 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு சோதனை.
எலிகளை வைத்து மேற்கொண்ட இந்த சோதனைகளில் முதல்
தலைமுறை எலிகளை ஒரு Meshக்குள் விட்டு சரியான பாதைய கண்டு பிடிக்க பழகினார்கள். அதன்
பிறகு சில மாதங்கள் கழித்து. பயிற்சி கொடுக்கப்பட்ட முதல் தலைமுறையின் குட்டிகளை
அதே Meshக்குள் எந்த விதமான பயிற்சியும் கொடுக்காமல் விடும் பொழுது, இயல்பாகவே
அந்த சரியான வழியை கண்டுபிடித்தது. இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த ஆராய்சியாளர்கள்.
மூன்றாம் தலைமுறைகளை உருவாக்கி அதே Meshக்குள் அனுபியுள்ளனர். இரண்டாம் தலைமுறை
எலிகள் கண்டுபிடித்த வேகத்தை விட மூன்றாம் தலைமுறை எலிகள் சற்று தாமதமாகத்தான்
கண்டுபிடித்துள்ளது. எலிகளில் நிருபிக்கப்பட்ட இந்த உண்மை, பூமியில் வாழும் எல்லா
உயிர்களுக்கும் பொருந்தும் மனிதர்கள் உள்பட.
இப்படி மாறும் நினைவுகள் தலைமுறைக்கு தலைமுறை எதற்கு
முன்னுரிமை கொடுகிறார்களோ, அதைபொருத்து மாற்றம் அடையவும் வாய்ப்பு உள்ளது. ஆனால்
நடப்பது சாபிடுவது போன்ற அடிபடையான விசயங்கள் மாற்றம் அடையாது. இந்த Genetic Memory யை மறுபடியும் Activate செய்ய முடியுமா என்று கேட்டால் தற்பொழுது உள்ள
சூழ்நிலைகளில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தான் சொல்ல முடியும். இதுவரைக்கும்
இது சம்மந்தப்பட்ட ஆராய்சிகள் எல்லாமே இயற்கையான வழியில் பாஸ் ஆகும் நினைவுகளை Identify செய்ய தானே தவிர செயற்கையான வழியில் Activate செய்ய முடியுமா என்ற ஆராய்சிகள்
மேற்கொள்ள வில்லை.
ஒரு வேலை இந்த Genetic Memory செயற்கையா Activate செய்தாலும், அதன் பிறகு
என்ன ஆகும் என்று யாருக்குமே தெரியாது. இப்படி மாற்றுவது மூலமாக, எந்த மாதிரியான
மாற்றங்களும் ஏற்படலாம். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், முன்பை விட அதிக
புத்திசாலித்தனம், அறிவுக்கூர்மை மாதிரியும் ஏற்படலாம். முன்னோருக்கு இருந்த
எதாவது ஒரு சிறப்பு பண்பு கூட நமக்கு கிடைக்கலாம் என்பது உள்பட என்னவேண்டுமானாலும்
நடக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. இதில் ஒரு ஆச்சரியமான
விஷயம் என்னவென்றால்.
ஒருவரின் தலை பகுதியில் அடிபடும் போது,
எதிர்பாராத விதமாக சிலருக்கு மட்டும் Genetic
Memory Activate செய்யபடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக
கூறுகின்றனர். ஆனால் அது இப்படி நிகழ்கிறது என்றும் இன்னும் விரிவாக ஆராய்ச்சி
செய்யப்பட வில்லை. மேலும் இதன் பற்றிய ஆராய்ச்சி நிலை இன்னும் ஆரம்ப நிலையில் தான்
உள்ளது. இருந்தாலும் எதிர்காலத்தில் யாரவது ஒரு நபர், அல்லது எதாவது ஒரு அமைப்பு
மிகப்பெரிய பொருளாதார பின்புலத்துடன் இது சம்பமான ஆராய்சிகளை மேற்கொண்டார்கள்
என்றால், Genetic Memory செயற்கையாக செயல்படுத்தப்படும் வழிமுறைகளை கண்டறிய
வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment