ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள்
இருகிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்
என்றே பதில் அளித்து வருகின்றனர். மேலும் பூமிக்கு வரும் வேற்று கிரகவாசிகள்
மனிதர்கள் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்கள் என்றும் ஒருசில வேற்று கிரகவாசிகள்
வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்கள் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துவுள்ளனர்.
கனடா நாட்டின் முன்னால் பாதுகாப்பு துறை
அமைச்சர் Mr. Paul Hellyer என்பவர். வேற்று கிரகவாசிகள் குறித்து ஒரு புதுவிதமான தகவலை
வெளியிடுள்ளார். அதாவது, இதுவரை நான்கு வகையான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு, கடந்த
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுகொண்டு இருக்கிறார்கள் மேலும் கடந்த சில
ஆண்டுகளாக வேற்று கிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பூமிக்கு வரும் வேற்றுகிரக வாசிகள் மனிதர்களின்
கண்டுபிடிப்பான அணுகுண்டை பார்த்து வருத்தம் கொள்கின்றார்கள், ஏனென்றால்
அணுகுண்டானது அண்ட சராசரத்தில் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தும் என வேற்று
கிரகவாசிகள் நம்புகிறார்கள். மேலும் பூமியை பசுமையாக்கும் பல்வேறு யோசனைகள்
அவர்களிடம் உள்ளன. வேற்று கிரகவாசிகளால் பருவ மாற்றங்களுக்கு தீர்வுகாண முடியும்.
சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகாஸ்
நகரில் கன்னியாஸ்திரி போல ஆடையணிந்து Shopping சென்றுள்ளனர். அவர்களை நான்
பார்த்துள்ளேன். ஆனால் அதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை என்றும் அவர்களை பார்த்த
நான் மட்டுமே இதற்கு ஆதாரம் என்றும் Mr. Paul Hellyer கூறியுள்ளார்.
No comments:
Post a Comment