Monday, 16 April 2018

இந்தியாவில் இருக்கும் பிச்சைகாரர்களின் சொத்து மதிப்பு


   பொதுவாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு எல்லாம், நம்முடைய அறிவு வளர்ச்சி மற்றும் நாகரீகத்திற்காக இருந்தாலும் கூட, இறுதியாக நாம் செய்யும் தொழில் மற்றும் பணத்தை வைத்து தான் நம் சமுதாயம் நம்முடைய தகுதியை மதிப்பிடுகிறது. படிப்பு மற்றும் தொழில் இவற்றை பொருட்படுத்தாமல், பிச்சை எடுத்தும் பெரிய பணக்காரர்கள் ஆகலாம் மேலும் சமுதாயத்திலும் வசதியாக வாழலாம் என சில பணக்கார பிச்சைகாரர்களை இப்பொழுது பார்க்கலாம்.

பரத் ஜெய்ன் : 49 வயதான பரத் ஜெய்ன் என்பவர், பிச்சை எடுத்து மும்பையில் இருக்கும் பரேல் என்ற இடத்தில் 7௦ லட்சம் மதிப்பில் 2 APARTMENT க்கு வாங்கியுள்ளார். ஆனால் இன்னமும் கூட அதிகாலையில் ஆரம்பித்து ஒரு நாள் முழுவதும் பிச்சை எடுப்பதால், இவருடைய APARTMENT க்கு வாரத்திற்கு ஒரு முறை தான் போக முடிகிறது என்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு ஜூஸ் கடையும் வாடகைக்கு விட்டுள்ளார். இதன் மூலம் மாதம் 1௦,௦௦௦ ரூபாய் வாடகையாக வருகிறது. பிச்சை எடுத்து மாதம் 75,௦௦௦ ஆயிரம் சம்பாதிக்கும் இவர். இன்னமும் பிச்சை எடுக்கும் தொழிலை விடவில்லை.

கிருஷ்ணா குமார் கீதே : கிருஷ்ணா குமார் கீதே மும்பையில் உள்ள சார்னி ரோடில் பிச்சை எடுக்கிறார். இந்த இடம் இவருக்கு ரொம்ப விருப்பமான இடமும் கூட என்கிறார். இவர் பிச்சை எடுப்பதன் மூலம். ஒரு நாளைக்கு 15௦௦ ரூபாய் சம்பாதிக்கிறார். மற்றும் நலசாபார என்ற இடத்தில் இவருக்கு சொந்தமான ஒரு FLAT ம் கூட உள்ளது. இங்கு தான் இவருடைய சகோதரருடன் வசித்து வருகிறார். கிருஷ்ணா குமாரின் கணக்கு வழகுகளை இவருடைய சகோதரர் தான் கவனித்து வருகிறார்.

சாம்பாஜி காலே : சாம்பாஜி காலே என்பவரும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 4 மும்பையில் உள்ள கார் என்ற பகுதியில் பிச்சை எடுகின்றனர். இவர் பிச்சை எடுப்பதன் மூலம் ஒரு நாளைக்கு 1௦௦௦ ரூபாயில் இருந்து 15௦௦ ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறார். மேலும் இவருக்கு மும்பையில் உள்ள விரார் என்ற பகுதியில் ஒரு FLAT ம், இரண்டு தனி வீடுகளும் மற்றும் சோலாப்பூரில் விலை நிலங்களும் உள்ளது. இவருடைய வங்கி கணக்கில் சில லட்சங்களும் உள்ளது.

சர்வத்யா தேவி : பாட்னாவை சேர்ந்த சர்வத்யா என்பவர் இந்தியாவில் புகழ்பெற்ற பெண் பிட்சைகாரர்களில் ஒருவர். பாட்னாவில் உள்ள அசோக் சினிமாஸின் பின்புறம் இவருக்கு சொந்தமான ஒரு பங்களா உள்ளது. மற்றும் ஒவ்வொரு வருடமும் 36,௦௦௦ ரூபாய் இன்சுரன்ஸ் பிரிமியம் செலுத்தி வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment